Wednesday , 22 January 2025

என்னடா நாங்க என்ன உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா? இந்தியாவ ஆய்வகம்னு சொன்ன பில்கேட்ஸ்..!!

இந்தியாவை ஒரு ஆய்வகம் என்று சொன்ன பில்கேட்ஸ் தற்போது தேசிய பேச்சு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது அது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான பில்கேட்ஸ் அண்மைக்காலமாக தன்னுடைய அறக்கட்டளைகள் மூலம் பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான உதவிகளை செய்து வருவது உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். 

இந்நிலையில் அண்மையில் ஒரு பிராட்காஸ்டில் கலந்து கொண்ட போது இந்தியா ஓர் ஆய்வகம் என்று பேசி ஒரு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்தியர்கள் மத்தியில் பெருத்த கோபத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்திவிட்டார்.

மேலும் இந்தியா புதிய விஷயங்களை சோதித்துப் பார்ப்பதற்கான ஆய்வகம் என தெரிவித்ததை அடுத்து இந்த வீடியோ சமூக வலைத்தளங்கள் முழுவதும் வைரல் ஆகியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து பில்கேட்ஸுக்கு எதிராக பலரும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருவதோடு இந்தியா குறித்து மோசமான பார்வையை பில்கேட்ஸ் கொண்டிருக்கிறார் என்று சொல்லி வருகிறார்கள். 

மேலும் ஆரோக்கியம், கல்வி, ஊட்டச்சத்து உள்ளிட்ட விஷயங்களில் அடிபட்டு ஒரு நாடு இருக்கிறது என்றால் அது இந்தியா தான் என கூறியதோடு அந்தத் துறைகளில் இந்தியா தற்போது படிப்படியாக முன்னேறி வருகிறது அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் இந்த மூன்று பிரிவுகளிலும் பெரிய மாற்றத்தை காண முடியும் என்று சொல்லி இருக்கிறார். 

அத்தோடு இந்தியாவில் ஒரு புதிய விஷயம் வெற்றி பெறுகிறது என்றால் அதை உலகின் மற்ற பகுதிகளில் எளிதாக எடுத்துச் செல்ல முடியும் என்ற விஷயத்தை தெளிவுபடுத்தி இருக்கிறார். 

இதைத்தொடர்ந்து இந்தியா ஒரு ஆய்வகம் என்ற பேச்சானது சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பயணம் ஒருவர் இந்தியர்கள் எல்லாம் உங்களுக்கு இனியா பன்றிகளைப் போன்றவர்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். 

ஆனால் நம்முடைய கல்வி அமைப்பு இவரை ஹீரோ என்று கொண்டாடுகிறது இவர் நம்மைப் பற்றிய பார்வையை வெளிப்படையாக தெரிவித்ததை அடுத்து இனியாவது கண் விழிக்க வேண்டாமா. 

ஆக பில்கேட்ஸ் இன் ஆய்வகத்திற்கு தேவையான மனித மாதிரிகள் தான் இந்தியர்கள் என்று மற்றொருவர் சொல்ல அவருடைய கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. 

Summary in English: Bill Gates recently stirred the pot with his comments about India, describing it as a “kind of laboratory to try things.” While he might have meant it in a positive light, suggesting that India is a place for innovation and experimentation, not everyone took it that way. Many felt that calling such a vibrant and diverse country a “laboratory” was overly simplistic and even patronizing.

Check Also

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

In a recent open talk, Rahul and Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul's drinking habits.