இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடு கோரி எஸ்டிபிஐ பேரணியில் வேல்முருகன் கலந்துகொண்டு சட்ட விரோதமான கருத்துக்களை கூறியதால் உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாஜக கூறியுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பாக சென்னையில் ஒரு மிகப்பெரிய அளவில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இந்த பேரணி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது என்று சொல்லலாம்.
அந்த வகையில் இந்தப் பேரணியில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அந்தச் சிறப்புரையில் தான் இவர் சில சட்டவிரோத கருத்துக்களை பேசி இருப்பதாக சொல்லி உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் என்று பாஜக கட்சியைச் சார்ந்த பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தொடர்ந்து தமிழகத்தை பொறுத்த வரை இஸ்லாமிய மத அடிப்படைவாத சக்திகளை ஊக்குவிக்க கூடிய பல்வேறு வகையான நிகழ்வுகள் நடந்து வருகிறது.
அந்த வகையில் எஸ்டிபிஐ கட்சியின் பேரணிக்கு சென்னை காவல்துறை அனுமதி அளித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அது மட்டுமல்லாமல் இந்த மாநாட்டில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகன் பேசும் போது இந்தியாவால் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மத அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை இந்திய ராணுவத்திற்கு நிகராக பேசினார்.
காவல்துறை இந்த பேரணிக்கு தடை போட்டு இருந்த நிலையில் முதல்வர் அலுவலகத்திலும் சென்னை காவல்துறை ஆணையத்திலும் நுண்ணறிவு பிரிவு தலைவர் இடத்திலும் உளவுத் துறை பிரிவிலும் பேசி இதற்கு அனுமதி பெற்று உள்ளனர்.
எஸ் டி பி ஐ யின் துணை அமைப்பாளர் பி எஃப் ஐ இந்திய ராணுவத்தின் துணைப்படை போன்றது சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் அமைப்பு என்றெல்லாம் பேசி இருப்பது சட்ட விரோதமான கருத்து என குற்றம் சாற்றப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகளின் செயல்களுக்கு தானே பொறுப்பேற்பதாக வேல்முருகன் பேசி இருப்பதும் ஹிந்து இயக்கங்களைச் சார்ந்தவர்களை பல படுகொலைகள் குண்டு வெடிப்புகளில் பறிபோன அப்பாவி மக்களின் உயிர்கள் பற்றி கேள்வி எழுப்பினார்.
இதில் கோவை குண்டு வெடிப்பு ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு சட்ட விரோத ஹிந்து மத விரோத செயல்கள் மற்றும் பி எஃப் ஐ ஆர் இந்தியாவில் அரங்கேற்றப்பட்ட அனைத்து செயல்களுக்கும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பேற்பாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அப்படி பொறுப்பேற்கும் பட்சத்தில் அவரை திமுக கட்சியை விட்டு நீக்குமா சட்டமன்ற உறுப்பினர் பதவியை நீக்க பரிந்துரை செய்யுமா? அல்லது தேசத்திற்கு எதிரான கருத்துக்களை அந்த நிகழ்ச்சியில் பேசியவர்களை கைது செய்ய உத்தரவிடுமா? என்பது போன்ற பல கேள்விகளை முன் வைத்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் அந்த இஸ்லாமிய மத அடிப்படைவாத பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் மற்றும் அவரின் ஆதார் ஆதரவாளர்களோடு தொடர்பு குறித்து தீவிர விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என கேட்டு இருக்கிறார்கள்.
இதுபோன்று நாட்டுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை சற்றும் சிந்திக்காமல் அரங்கேற்றும் இயக்கங்களை கட்டுப்படுத்தக்கூடிய பொறுப்பு தமிழக காவல்துறைக்கு உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசி இருக்கும் வேல்முருகனின் பேச்சின் நோக்கம் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் அவரது இந்த பேச்சுக்கு தடை விதிப்பதோடு மட்டுமல்லாமல் தேசிய புலனாய்வு முகமையின் உதவியோடு வருங்காலத்தில் இது போன்ற இயக்கங்களின் பேரணிகளை தடுப்பதோடு மட்டுமல்லாமல் அதை தடுக்க வேண்டும் என நாராயணன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
Summary in English : The political landscape in India is heating up again! Recently, the Bharatiya Janata Party (BJP) has made headlines by demanding the arrest of Velmurugan, who was a participant in a rally organized by the Social Democratic Party of India (SDPI). This demand comes amidst rising tensions and differing opinions on various social and political issues.