வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த சுவாமி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு அவர்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டித்து காசா, பாலஸ்தீன் லெபனானுக்காக குரல் கொடுத்தவர்கள் வங்கதேசத்தில் இந்துக்களுக்காக குரல் கொடுப்பார்களா என்று பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா கூறிய விஷயம்.
வங்கதேசத்தை சேர்ந்த இஸ்கான் அமைப்பின் சுவாமி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு அவர்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டித்து பேசியிருக்கும் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா கூறிய விஷயம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய எக்ஸ் பதிவில் பங்களாதேஷ் நேஷனல் பார்ட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது என்பதை உறுதி செய்தார்.
அத்தோடு ஏற்கனவே வங்கதேசம் இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கும் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுக்கும் சப்போர்ட் செய்வதோடு இந்துக்கள் மீதான கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து சித்திரவதை செய்வதையும் ஹிந்து வழிபாட்டுத்தலங்கள் ஹிந்துக்களின் மனித நிறுவனங்களின் மீது தீ வைக்க கூடிய சம்பவங்களை தொடர்ந்து நிகழ்த்தி வருவதாக கண்டித்த சுவாமி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு அவர்களை கைது செய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்துக்கள் அமைதியாகவும் பிரிந்தும் இருந்தால் தான் அவர்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்லாமிய இயக்கங்களுக்கு முடியும் என்பதை உணர்ந்து கொண்டு ஒட்டுமொத்த இந்துக்களின் மீது பகை உணர்வோடு இருப்பதாக சொல்லி இருக்கிறார்.
அதற்காகத் தான் இந்துக்களின் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள் கொலை வெறி தாக்குதல்களை கண்டித்து வங்கத்தில் இருக்கும் இந்துக்கள் ஒன்று திரண்டு வீதிக்கு வந்து போராடும் சூழ்நிலையை சுவாமி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு அவர்கள் உருவாக்கினார்.
இந்துக்களின் ஒற்றுமையையும் போராடும் குணத்தையும் அவர் உருவாக்கிய காரணத்தால் அவர் மீது ஆத்திரம் கொண்ட வங்கதேச அரசு அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் தற்போது அடைத்துள்ளது.
ஒரு காலத்தில் பாரதத்தின் ஒரு அங்கமாக இருந்த பாகிஸ்தான் அதிலிருந்து பிரிந்து சென்று பின் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து உருவான வங்கதேசமும் பெருந்தன்மையோடு இஸ்லாமியர்களுக்கு தனி நாடு கொடுத்த இந்துக்களுக்கு அவர் நாடுகளிலும் நிகழ்ந்து வரும் கொடுமைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரையில் அவர்கள் ஒற்றுமையாக இருந்தால் இந்துக்கள் இந்து சமுதாயத்திற்கும் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் முதலிய வாழ்வியல் உரிமைகள் வரை பாதுகாப்பாக இருக்கும்.
அந்த வகையில் நமது பாரதப் பிரதமரும் உபி முதல்வர் திரு.யோகி ஆதித்யநாத் அவர்கள் முழங்கக் கூடிய வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல.
வங்காளதேசத்தில் இஸ்கான் அமைப்பை சேர்ந்த ஸ்வாமி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு அவர்கள் கைது செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
Bangladesh National Party கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்காளதேசத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும்,… pic.twitter.com/IaCVMSxuec
— H Raja (@HRajaBJP) November 26, 2024
எனவே வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்காக போராடி வரும் சுவாமி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு அவர்களுக்கு நாம் ஆதரவு குரல் கொடுப்பதோடு காசாவுக்கும் பாலஸ்தீனத்திற்கும் லபனுக்கும் லெபனானுக்கும் குரல் கொடுத்தவர்கள் இந்துக்களுக்காக குரல் கொடுப்பார்களா? பார்ப்போம் என்று பேசி இருக்கிறார்.
Summary in English: Recently, BJP leader H. Raja made headlines by condemning the arrest of ISKCON Swami Chinmoy Krishna Das Prabhu in Bangladesh. This incident has sparked quite a bit of conversation, especially among those who follow the activities of ISKCON and its leaders.