வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து சென்னை மற்றும் வட மாவட்டங்களில் புயல் மலையின் தாக்கம் அதிகளவு இருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். அந்த வகையில் தற்போது வங்க கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஏற்பட இருக்கும் நிலைமை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
தற்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனால் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டி இருக்கும் மத்திய மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று நிலவுவதால் காற்று அடித்த தாழ்வு பகுதி உள்ளதாக வானிலை மையம் சொல்லியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற நிலையில் சென்னைக்கு 390 கிலோமீட்டர் கிழக்கில் மையம் கொண்டு உள்ளதால் கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.
எனவே அடுத்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து வட கிழக்கு திசையில் நகரக்கூடும் இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதுமட்டுமல்லாமல் இன்று அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனி
முட்டம் காணப்பட்டது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக இருந்தது. ஒரு சில இடங்களில் லேசாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அதிகாலை நேரத்தில் லேசான பனிமுட்டம் காணப்படும் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று வீச வாய்ப்பு இருப்பதால் அந்தப் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஒன்றாம் எண் புயல் கூடு ஏற்றப்பட்டு விட்டதை அடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளது.
Summary in English: If you’ve been keeping an eye on the weather lately, you might have heard about the depression forming just 0 km from Chennai. Yep, that’s right! It’s a storm warning that has everyone buzzing. So what does this mean for us? Well, when we talk about a depression in meteorological terms, it refers to a low-pressure area that can lead to heavy rainfall and strong winds.