Wednesday , 22 January 2025

கோவையில யாருக்கும் நைட்ல லிப்ட் கொடுக்காதீங்க.. கணபதி, சரவணம்பட்டி பகுதியில் நடந்த சம்பவம்..

கோவையில் டூவீலரில் சென்ற இளைஞர்களிடம் லிப்ட் கேட்பது போல் நடித்து அவர்களை கடத்திச் சென்று பணம் பறிக்கும் கும்பல் குறித்து கோவை போலீசார் பொதுமக்களிடம் உஷாராக இருக்க வேண்டி இருக்கிறார்கள். 

தமிழகத்தின் மிகப்பெரிய இரண்டாவது தொழில் நகரமாக திகழும் கோவையில் ஜவுளி, ஆட்டோ மொபைல், பம்ப் செட்டுகள், கனரக வாகனங்களின் உறுதி பாகங்களின் உற்பத்தி படு ஜோராக நடந்து வருகிறது. 

அதுமட்டுமல்லாமல் இந்த மாவட்டத்தில் ஏராளமான கல்வி நிறுவனங்களும், கல்லூரிகளும் அமைந்துள்ளதை அடுத்து கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஐடி நிறுவனங்கள் தங்களது கிளைகளை கோவையில் அமைந்ததை அடுத்து மிகப்பெரிய வளர்ச்சியை கோவை எட்டியுள்ளது. 

இந்தியாவிலேயே வேகமாக வளரும் நகரங்களில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும். கோவையில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் வசித்து வருவதால் எந்த பேதமும் இன்றி இந்த மண்ணில் அனைவரும் ஒற்றுமையோடு இருக்கிறார்கள். 

எனவே இந்த மாவட்டத்தை பொருத்த வரை பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு இருக்கக்கூடிய நபர்கள் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு சாலையில் சென்று இரவு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். 

அந்த வகையில் கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் நாலாம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 

இவர் எப்போதும் இரவு நேரத்தில் வீட்டுக்கு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்ததை அடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் வேலையை முடித்து இரவு 9 மணி அளவில் நல்லாம்பாளையம் அருகே தனது டூவீலரில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.

அப்போது சாலை ஓரத்தில் நின்ற நபர் ஒருவர் அவரிடம் லிப்ட் கேட்க அதை பார்த்து இறக்கப்பட்டு தனது வாகனத்தை நிறுத்தி அந்த நபரை ஏற்றி சென்றதை அடுத்து சிறிது தூரம் சென்ற பிறகு பின்னால் இருந்த நபர் திடீரென்று கத்தியை எடுத்து வாலிபரின் கழுத்தில் வைத்திருக்கிறார்‌.

அத்தோடு சத்தம் போட்டால் குத்தி விடுவேன் என்று மிரட்டியதோடு மட்டுமல்லாமல் தான் சொல்லும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறியதை அடுத்து வேறு வருகின்ற அந்த நபர் சொன்ன இடத்திற்கு தனது வாகனத்தை ஓட்டிச் சென்றார். 

இறுதியாக அவர் கணபதி அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதிக்குள் சென்றதை அடுத்து அங்கு ஐந்து பேருக்கும் மேற்பட்ட கும்பல் நின்று இருக்கிறது. அங்கு சென்றதும் அந்த கும்பல் வாலிபரிடம் இருந்த நகை பணத்தை உடனே உடனடியாக எடுத்துக் கொடு இல்லையென்றால் கொன்று விடுவேன் என்று மிரட்ட பயந்து போய் தன்னிடம் நகையோ, பணமோ இல்லை என்று கூறி இருக்கிறார். 

இதை அடுத்து அந்த இளைஞரின் வாயை பிளந்து மாத்திரையை போட்டு தண்ணீரை ஊற்றியதை அடுத்து அந்த மாத்திரையை தினங்களுக்கு போதை ஏறியவுடன் அந்த கும்பல் நண்பர்களுக்கு போன் செய்து ஆன்லைன் மூலம் உடனடியாக ஐம்பதாயிரம் அனுப்பச் சொல்ல மிரட்டி இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் அந்த கும்பலில் இருந்த சிலர் அவரை பலமாக தாக்கவும் செய்து இருக்கிறார்கள். இதை அடுத்து காயம் அடைந்த வாலிபர் தனது நண்பர்களுக்கு போன் செய்து ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பச் சொல்ல அந்த பணம் வந்ததும் அந்த கும்பலில் இருந்தவர்கள் ஜிபே மூலம் ஸ்கேன் செய்து அந்த பணத்தை தங்கள் வங்கி கணக்குக்கு மாற்றிவிட்டார்கள். மீதி இருந்த 30 ஆயிரத்தை கொடுக்கவில்லை என்றால் விடமாட்டோம் மரத்தில் கட்டி வைத்து விடுவோம் என மிரட்டி இருக்கிறார்கள். 

இதைத்தொடர்ந்து அதுபோன்றே மற்றொரு வாலிபரை கத்தியை காட்டி இருசக்கர வாகனத்தில் இன்னொரு நபர் அழைத்து வந்திருக்க உடனே அந்த கும்பல் 20,000 பறித்து வாலிபரின் செல்போனை அவனிடம் கொடுத்துவிட்டு புதிதாக வந்த நபரிடம் பணம் பறிக்க சென்றது. 

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பணத்தை பறி கொடுத்த வாலிபர் அந்த பகுதியில் இருந்து தப்பி ஓடி வந்தார். இந்தப் பகுதியில் மட்டும் ஒரே நாளில் மூன்று பேரிடம் இருந்து இது போல பணம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இதை அடுத்து காவல்துறை கோவையில் இருக்கும் கணபதி மற்றும் சரவணம்பட்டி பகுதியில் ஒன்பது மணிக்கு மேல் லிஃப்ட் யார் கேட்டாலும் கொடுக்க வேண்டாம் என்ற செய்தியை சொல்லி இருப்பதோடு இந்த கும்பல் மீது தக்க நடவடிக்கை எடுக்க முனைப்போடு உள்ளது. 

Summary in English: ‌So, let’s talk about something that’s been buzzing around Coimbatore lately — the “don’t-give-anyone-a-lift-at-night” incident on the Ganapathi route. If you’ve been out and about in the city after dark, you might have heard some whispers or even seen posts warning folks to be cautious when it comes to picking up strangers.

Check Also

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

In a recent open talk, Rahul and Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul's drinking habits.