Wednesday , 22 January 2025

தவெக தலைவர் விஜயை விமர்சித்து பாடிய பாடகர் கோவன்.. கொந்தளிப்பில் தொண்டர்கள்..

தளபதி விஜய் அவரின் அரசியல் வருகையை விமர்சனம் செய்யக்கூடிய வகையில் நாட்டுப்புறப் பாடகர் கோவன் பாடிய பாடல் இணையதளங்களில் வெளிவந்து தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதியை சர்வதேச மனித உரிமை நாளாக கொண்டாடி வருவது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம் இந்த மனித உரிமைகள் மீறப்படுவதை கண்டிக்க கூடிய வகையில் இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகைகள் சர்வதேச மனித உரிமை நாள் கருத்தரங்கம் ஒன்றில் நாட்டுப்புற பாடல்கள் வீடியோ தற்போது வெளிவந்து இணையத்தில் பேசும் பொருளாகவும் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துவிட்டது. 

மேலும் இந்தப் பாடலில் நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் வருகையை கடுமையாக விமர்சனம் செய்து பாடியிருப்பதாக பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அமைந்துள்ளது. 

அத்தோடு நடிகர் விஜய் நடித்த படத்தின் பெயரையும் நடிகர் விஜய்யும் ஒப்பிட்டு அந்த பாடலில் அவர் விளாசி இருக்கிறார். இது தமிழக வெற்றி கழகத்தின் கோபத்துக்கு ஆளாகிவிட்டது. 

அதுமட்டுமல்லாமல் பாடகர் கோவன் இந்த பாடல் வீடியோ திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிரானவர்கள் என்று வலை செய்திகளை பரப்பி வருகிறார்கள். 

அந்த வீடியோவில் கோபம் சிவப்பு நிற சட்டை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து பாடி இருப்பதோடு அந்த பாடலில் வரும் சில வரிகள் 

தொட்டபெட்டா ரோட்டுல முட்டை பரோட்டா தின்னாரு

ரஞ்சிதமே ரஞ்சிதமே குத்தாட்டம் போட்டாரு

திராவிட கொள்கை பேசி நடித்தாரு எம்ஜிஆரு

ஓ ஓ திராவிட கொள்கை பேசி நடித்தாரூ எம்ஜிஆரு

தளபதி படத்துல எந்த கொள்கையை உதித்தாரு

அனிதா இறந்தபோது எங்க போனீங்க சிவகாசி..

நீட் தேர்வு எடுத்த போது என்ன செஞ்சீங்க பகவதி

ஸ்டெர்லைட் போராட்டம் எங்க போனீங்க துப்பாக்கி

டெல்லி போராட்டம் தெரியுமா பக்கிரி 

அட முதல்வர் கனவு நடக்கட்டும்

உங்க முதுக பாருங்க போக்கிரி

உஷாரு உஷாரு தவெக உஷாரு உஷாரு

உஷாரு தவெக உஷாரு

இந்த பாடல் வரிகள் தான் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியிலும் தாவா தொண்டர்கள் மத்தியிலும் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த இந்த பாடகர் 2015 ஆம் காலகட்டத்தில் மதுவிலக்கு போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வந்து அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்த சமயத்தில் மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடல் பாடி அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். 

இதைத்தொடர்ந்து தேச துரோக சட்டத்தில் கைது செய்யப்பட்டார் அப்போது அவருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தார்கள். இதை அடுத்து ஜெயலலிதாவை விமர்சித்து பாடல் பாடியவர் மீது தேசத்துரோக வழக்கு போடுவது நியாயமா என்று கேள்விகள் எழும்பியது.

இதைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சியை நடக்கும் நிலையில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து இருப்பதை அடுத்து அவர் எதுவும் கண்டு கொள்ளவில்லை என்ற பேச்சுக்கள் எழுந்த நிலையில் இவர் ஒரு திமுக ஆதரவாளர் அதனால் தான் அமைதி ஆக்கியார் என்ற விமர்சனங்கள் வெளிவந்தது. 

இந்த சூழ்நிலையில் தற்போது நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் கட்சி குறித்து தனது பாடலில் விமர்சனம் செய்திருப்பது பலர் மத்தியிலும் பேசும் பொருளாக மாறி உள்ளது. 

Summary in English: In the vibrant world of music and politics, sometimes a folk singer’s voice can stir up quite the conversation. Enter Kovan, a talented artist known for his thought-provoking songs. Recently, he caught everyone’s attention with a track that takes aim at actor Vijay and his foray into politics.

Check Also

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

In a recent open talk, Rahul and Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul's drinking habits.