வண்டலூர் உயிரியல் பூங்காவில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டதோடு 180 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் நிலையத்தை திறந்து வைத்தார் அது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
வண்டலூரில் தற்போது புதுப்பிக்கப்பட்டு வரும் விலங்கு கூடம், வேடந்தாங்கல் பறவைகள் கூடு ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டு வண்டலூரில் மாஸ் என்று சொல்லக்கூடிய வகையில் செயல்பட்டார்.
இந்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரிய வகை மிருகங்கள் உள்ளதோடு 2400 க்கும் மேற்பட்ட மிருகங்கள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதுபோல பறவை இனங்களும் பல உள்ளதால் சுற்றுலா பயணிகள் இதை கண்டு கடிக்க தினம் தினம் படை எடுத்து வருகிறார்கள்.
இந்த பூங்காவை பொறுத்தவரை தினசரி 2500 முதல் 3000 பேர் பார்வையாளராக வந்து செல்வதோடு விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் 10,000 பேர் கூட இங்கு வந்து செல்வதாக தரவுகள் சொல்லுகிறது.
அத்தோடு கடந்த வருடம் புவனேஸ்வரி நடந்த தேசிய உயிரியல் பூங்கா இயக்குனர்கள் மாநாட்டில் நாட்டின் சிறந்த பூங்கா என்ற விருதை இந்த பூங்கா பெற்றுள்ளதோடு பல்வேறு வகையான மேம்பாட்டு திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ரூபாய் 4.36 கோடி ரூபாய் செலவில் 3டி மற்றும் 70 திரையரங்கம் அமைக்க ஏற்கனவே திட்டமிட்டு அதற்கு அனுமதியும் கொடுத்திருந்தார்கள். பார்வையாளர்கள் புதிய வழிமுறையில் வனவிலங்குகளை பற்றி தெரிந்து கொள்ள இந்த நிதி ஒதுக்கீடானது செய்யப்பட்டது.
அதன்படி தொழில்நுட்பத் தியேட்டர் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று பூங்காவுக்கு வருவோர் விலங்குகளை நேரடியாக கண்டு ரசிக்க நவீன தொழில்நுட்பத்தில் திரைப்பட வடிவில் விலங்குகளை ரசிக்கக் கூடிய வகையில் 7D தியேட்டர் கட்டப்பட்டது இதற்கு மொத்தம் நான்கு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு 32 இருக்கைகளோடு எந்த தியேட்டர் அமைந்துள்ளது.
பலராலும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கப்பட்ட எந்த தியேட்டரை அமைச்சர் பொன்முடி தற்போது திறந்து வைத்திருக்கிறார் அது மட்டுமல்லாமல் அவர் அந்த தியேட்டரில் அமர்ந்து விலங்குகள் தொடர்பான மூன்று நிமிட சினிமாவை பார்த்து ரசித்தார்.
அத்தோடு வண்டலூர் உயிரியல் பூங்காவில் 180 கிலோ வோட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் நிலையத்தை திறந்து வைத்து புதிதாக கட்டப்பட்டிருக்கும் விலங்கு கூடம் வேடந்தாங்கல் பறவை கோடு ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
மேலும் தமிழக மாநில விலங்காக இருக்கும் நீலகிரி உரையாடுகள் தற்போது அழிவின் விளிம்பில் இருப்பதால் அவற்றை பாதுகாக்கும் பொருட்டு நீலகிரி வரையாடு திட்டத்தை துவங்கி வைத்த இவர் இந்த திட்டப்படிகள் அனைத்தும் 25.14 கோடி செலவில் 9 முக்கிய கூறுகளுடன் நடைமுறைப்படுத்தப்படும் என்று சொல்லி இருக்கிறார்.
இதை அடுத்து புதிய தியேட்டர்களை காண ரசிகர்கள் அனைவரும் ஆர்வம் காட்டி வருவதோடு சுற்றுலா பயணிகளுக்கு இது மகிழ்ச்சி தரும் விஷயமாக மாறி உள்ளது என்று சொன்னால் மிகையாகாது.
Summary in English: Hey everyone! Exciting news coming out of Vandalur Zoo! The Tamil Nadu Forest Minister, Ponmudi, recently announced the grand opening of the 7D theater right inside the zoo. This is such a fun addition for families and animal lovers alike. Imagine taking a break from exploring the wildlife to enjoy an immersive 7D experience that brings stories to life in a whole new way!