Wednesday , 22 January 2025

டெல்டா மாவட்டங்களுக்கு உஷார் எச்சரிக்கை.. புதிய காற்றழுத்த தாழ்வு கனமழை மார்னிங்..!

தமிழகத்தை பொறுத்தவரை கடந்து சில வாரங்களாகவே கனமழை எழுத்து வாங்குகிறது இந்நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கியதை அடுத்து மீண்டும் கன மழை துவங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து டிசம்பர் 15-ஆம் தேதி வரை இயல்பை விட கூடுதலாக 30 சதவீதம் மழை பொழிவை பெற்றுள்ளது. 

அதாவது வழக்கத்துக்கு மாறாக இந்த நாட்களில் 410.3 மில்லி மீட்டர் அளவு மழை பெய்து இருக்க வேண்டும் ஆனால் 564.6 மில்லி மீட்டர் அளவு மழை பெய்து இயல்பு சூழ்நிலையை புரட்டிப் போட்டு விட்டது. 

இதனை அடுத்த தற்போது வங்க கடலில் உருவாக்கியுள்ள வளிமண்டல சுழற்சியானது காற்று அழுத்த தாழ்வு பகுதியாக மாறி வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளதால் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதை அடுத்து நாளை முதல் தமிழ்நாட்டில் நல்ல கனமழை தொடங்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது மேலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

அதுமட்டுமல்லாமல் கடலோர தமிழகத்தில் அநேக பகுதிகளில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலோடு லேசான முதல் கனமான மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. 

குறிப்பாக நாகப்பட்டினம் திருவாரூர் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் அதுபோல தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வரும் டிசம்பர் 18-ஆம் தேதி தமிழகத்தின் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுடன் இடி மின்னலோடு கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் அத்தோடு கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. 

இந்நிலையில் புதுவை மற்றும் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

இதுபோலவே டிசம்பர் 19-ஆம் தேதியும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திருவள்ளூர் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை வேலூர் மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

மேலும் டிசம்பர் 20-ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்தோடு காணப்படும் இங்கும் லேசான மிதமான மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. 

எனவே தமிழ்நாட்டைப் பொருத்தவரை வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் அதிகபட்சமாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 22- 23 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Summary in English: Hey there, everyone! If you’ve been keeping an eye on the weather lately, you might be relieved to hear that the heavy rain warning has finally been lifted. It turns out that the low-pressure area that was causing all that chaos has moved on, leaving us with clearer skies ahead.

Check Also

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

In a recent open talk, Rahul and Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul's drinking habits.