Wednesday , 22 January 2025
kasthuri-hiding-in-delhi

டெல்லிக்கு ஓடிய நடிகை கஸ்தூரி.. விரைந்து செல்லும் தமிழக தனிப்படை..! இன்று கைது? 

எந்த நேரத்திலும் நடிகை கஸ்தூரி கைது செய்யப்படலாம் என்பதை அறிந்து கொண்டு டெல்லியில் ஒரு கட்சி பிரமுகரின் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் தனிப்படை இன்று டெல்லி விரைகிறது. 

நடிகை கஸ்தூரியின் முன் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டதை அடுத்து அவர் எந்த நிமிடமும் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்பட்டு வந்த வேளையில் இன்று தனி படை டெல்லியில் நோக்கி விரைந்து செல்ல இருப்பதால் விரைவில் கஸ்தூரி கைது செய்யப்படலாம். 

kasthuri-hiding-in-delhi

நடிகை கஸ்தூரி டெல்லியில் முக்கிய கட்சி பிரமுகரின் வீட்டில் இருந்தால் இன்னும் ஒரு இரு நாட்களில் கைது செய்யப்படலாம் என்ற பேச்சு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவதற்கு காரணமே அவர் ஆந்திராவில் ஒரு சினிமா தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. 

டெல்லிக்கு ஓடிய நடிகை கஸ்தூரி..

இதை அடுத்து போலீசார் அங்கு விரைந்து உள்ளதாக தகவல்கள் வெளி வந்ததை அடுத்து தற்போது டெல்லியில் முக்கிய தேசிய கட்சியின் பிரமுகர் வீட்டில் இருப்பதாக தகவல்கள் கசிந்ததை அடுத்து அங்கும் தனிப்படை வரைந்து உள்ளதாக சொல்லப்படுகிறது. 

இப்படி இவரை போலீசார் தேடி கைது செய்ய காரணம் என்ன தெரியுமா? பிராமண சமூகத்தாரை வந்தேறிகள் என பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

 இதை கண்டிக்கும் விதமாக சென்னை எழும்பூரில் பிராமணர்கள், இந்து முன்னணி நிர்வாகிகள் இணைந்து நடத்திய போராட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். 

அப்படி அந்தப் போராட்டத்தில் அவர் கலந்து கொண்ட போது தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக சில விஷயங்களையும், செய்திகளையும் பேசியதை அடுத்து மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. 

kasthuri-hiding-in-delhi

இதை அடுத்து தெலுங்கு பேசும் பிரிவை சேர்ந்த பல்வேறு கட்சி பிரதிநிதிகள் கஸ்தூரிக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்ததோடு அந்த கருத்தை வாபஸ் பெறுமாறு பகிரங்கமாக அறிவித்ததோடு பகிரங்க மன்னிப்பும் கேட்கக் கூறினார்கள். 

எனினும் இந்த சர்ச்சைகளுக்கு சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்த கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் மீது மதிப்பும் மரியாதையும் இருப்பதால் அவர்களை தவறாக பேசவில்லை என்றும் தெலுங்கு பேசும் குடும்பத்தின் மருமகளான நிலையில் நான் எப்படி பேசுவேன் என்ற கேள்வியை எழுப்பினார்.

இதை அடுத்து விடாக்கொண்டேன் கதையாக அவர் பேசிய வீடியோவை போட்டு காட்டி இப்படித்தான் பேசுனீர்கள் என்று சுட்டிக் காட்டியதை அடுத்து தமிழகம் முழுவதும் கஸ்தூரி மீது புகார் கொடுக்கப்பட்டது. 

இதனால் என்ன செய்வது என்று தெரியாத நடிகை கஸ்தூரி தனது போயஸ் தோட்டம் இல்லத்தை பூட்டிவிட்டு செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து நடை மறைவு ஆகிவிட்டார்.

விரைந்து செல்லும் தமிழக தனிப்படை..! இன்று கைது?  

மேலும் போலீசார் அவருக்கு சமன் கொடுக்க சென்றபோது அவர் இல்லாத விஷயம் தெரியவர தனிப்படை ஒன்றை அமைத்து அவரைத் தேடி வருகிறார்கள். 

இந்நிலையில் மதுரை திருநகர் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் முன் ஜாமின் கேட்டு விண்ணப்பிக்க அந்த மனு தள்ளுபடி ஆனது. 

இது மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளும் கஸ்தூரி இப்படி நடந்து கொள்வது முறையல்ல என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருந்தார். 

இதை அடுத்து தலைமுறைக்கான கஸ்தூரி வேறு செல்போனில் இருந்து யாராவது ஒரு பேசி வருகிறாரா? அல்லது அவரது நெருக்கமானவர்களின் செல்போனுக்கு தகவல்கள் ஏதேனும் வருகிறதா? என்று போலீஸ் கண்காணித்ததாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் தான் நடிகை கஸ்தூரி டெல்லியில் ஒரு அரசியல் பிரமுகர் வீட்டில் தங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து அங்கு தனி படை விரைந்துள்ளது. இதை அடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

Summary in English: It looks like things are heating up with actress Kasturi making headlines lately! Rumor has it that she’s been hiding out, and the Delhi police special team is on the case, rushing in for action. It’s like something straight out of a movie, right?

Check Also

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

In a recent open talk, Rahul and Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul's drinking habits.