Wednesday , 22 January 2025

ஏலத்திற்கு வரும் வீடு வறுமையில் வாடும் எம்ஜிஆர் பிஏ காப்பாற்றுவாரா? ஓபிஎஸ், இபிஎஸ் ..

எம்ஜிஆரிடம் 15 ஆண்டுகளுக்கு மேலாக உதவியாளராக இருந்தவர் கடன் சுமை காரணமாக வீட்டை மீட்க முடியாமல் வீடு ஏலத்துக்கு வரும் சூழ்நிலையில் உள்ளது. இது குறித்து விரிவான தகவலை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ஆர் மறைந்து 37 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. ஆனால் அவர் துவங்கிய அதிமுக இன்று வரை மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க கட்சிகளில் ஒன்றாக திகழ்கிறது. 

புதிதாக கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடும் நபர்களுக்கு கூட எம்ஜிஆரின் செல்வாக்கு அவசியம் தேவை என்று சொல்லலாம். அந்த அளவு மக்களின் மனதில் இடம் பிடித்த எம்ஜிஆர் படங்கள் திரையரங்குகளில் வெளியானால் பல லட்சங்களை வாரி குவிக்கும். 

தமிழக அரசியலில் சிங்கமாக திகழ்ந்த இவர் என்ன சொன்னாலும் மக்கள் அப்படியே கேட்கக் கூடிய வகையில் மக்களை கவர்ந்து ஈர்க்கும் தன்மை அவரிடம் இருந்தது. அதுமட்டுமல்லாமல் எம்ஜிஆர் மனைவி விஎன் ஜானகியின் நூற்றாண்டு விழா  எடப்பாடி தலைமையில் அண்மையில் கொண்டாடப்பட்டது. 

எம்ஜிஆர் விட உதவி பெற்றவர்கள் என்று பெரிய தொழில் அதிபராகவும் மக்கள் மத்தியில் செல்வாக்கும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவருடன் 15 ஆண்டுகள் நிழல் போல் பின் தொடர்ந்து வந்த அவரது உதவியாளர் மகாலிங்கம் கடன் சுமையால் தத்தளித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

இந்நிலையில் இவருக்கு அதிமுக தலைமையில் உள்ள அனைவருமே உதவ முன் வரவில்லை என்று மனம் வருந்தி பேசி இருக்கிறார். இவர் எம்ஜிஆர் உடன் நெருக்கமாக இருந்த கருப்பையா தான் இவரது தந்தை. 

1972-ல் அவர் இறந்த பிறகு இவரது மகன் மகாலிங்கத்தை எம்ஜிஆர் தன்னுடன் வைத்துக்கொண்டார். திமுகவிலிருந்து எம்ஜிஆர் நீங்கிய போது முதல் முதலாக இந்து பத்திரிக்கை நிருபர் தொலைபேசி செய்து சொல்லி இருக்கிறார். 

மேலும் இதற்கான பதிலைக் கேட்ப போது எம்ஜிஆர் நேற்று இன்று நாளை படப்பிடிப்பில் இருந்துள்ளார். அவருக்கு மகாலிங்கம் மூலம் தகவல் போய் உள்ளது ஆனால் எம்ஜிஆர் அதற்காக பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. உதவியாளர் உங்கள் ரியாக்ஷன் என்ன என்ன கேட்கச் சொன்னார்கள். 

இதற்கு எம்ஜிஆர் பாயாசம் சாப்பிட்டு கொண்டிருக்கிறேன் என்று சொல் என்று பதிலடி கொடுத்தார். அதன் பிறகு அதிமுக உருவானது உலகம் அறிந்த விஷயம். மேலும் இவரது சகோதரர் சபரி நாதனுக்கு தலைமை கழகத்தில் வேலை போட்டும் கொடுத்திருக்கிறார். 

இந்நிலையில் எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜானகியின் குடும்பம் கட்சிக்குள் வந்த பிறகு இவரை அங்கிருந்து வெளியேற்றி விட்டார்கள். ஜெயலலிதாவை சந்தித்தபோது அவரிடம் எந்த உதவியும் எதிர்பார்த்ததில்லை. அவரும் செய்ததில்லை என்று மகாலிங்கம் அண்மை பேட்டியில் கூறி இருப்பதோடு தான் கடன் சுமையால் தவிப்பதாக சொல்லியிருக்கிறார்.

இவர் கஷ்டப்படுவதைப் பார்த்து அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் X பக்கத்தில் பதிவினை போட்டு எம்ஜிஆர் உதவியாளரை காப்பாற்ற முடியாதவர்கள் அதிமுகவை எங்கே காப்பாற்ற போகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.

மேலும் ஜானகி அம்மாவிற்கு எடுத்த விழாவில் பொன்னாடை போட்டு கௌரவம் அளித்தோம் என்று சொல்லியதை அடுத்து தன்னை யாரும் அதற்கு அழைக்கவில்லை என்று மகாலிங்கம் மறுத்திருக்கிறார். 

அத்தோடு எம்ஜிஆர் இறந்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டது அவர் செய்த உதவியை வைத்து தான் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம்.மேலும் செய்த வியாபாரம் நஷ்டமாகி அன்றாட உணவுக்கே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் யாரும் உதவவில்லை பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை என்று தி டிபேட் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார். 

மேலும் இவரது சொத்துக்கள் வங்கியில் அடமானத்தில் இருப்பதால் அதை மீட்க முடியாமல் தவிப்பதாகவும் ஜப்தி நோட்டீஸ் வந்துவிட்டது என்றும் குடியிருக்கும் வீட்டுக்கே பிரச்சனை ஊருக்கே வாரி கொடுத்த வள்ளல் எம்ஜிஆர் உதவியாளர் தற்போது சாப்பாட்டுக்கே சென்றாடுகிறார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. 

இந்த விஷயம் எடப்பாடி  பழனிசாமிக்கு தெரியுமோ தெரியாதோ ஆனால் தனக்கு அதிமுக உதவவில்லை என்று மனம் வருந்தி மகாலிங்கம் பேசி இருக்கிறார். வரும் டிசம்பர் 24ஆம் தேதி எம்ஜிஆர் நினைவு நாள் வரும் அதற்குள் இவர் நினைத்தது நடக்குமா? பொறுத்திருந்து பார்த்தால் தெரியவரும். 

Summary in English: When you hear about someone losing their house because of a bank loan, it hits hard, right? That’s the reality for many folks in PA, and it’s a tough situation that leaves families living in poverty. It’s not just about the roof over your head; it’s about stability and security for your loved ones.

Check Also

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

In a recent open talk, Rahul and Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul's drinking habits.