Wednesday , 22 January 2025
update

உஷார்.. இனி ஆதாரில் Just 2 தடவை தான் இந்த திருத்தம்..

ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடையாளமாக விளங்கும் ஆதார் அட்டையை புதுப்பிக்க சில விதிகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளது உங்களுக்கு தெரிந்திருக்கும். 

அந்த வகையில் நீங்கள் உங்கள் ஆதாரை திருத்தம் செய்ய நினைத்தால் எத்தனை முறை திருத்தம் செய்யலாம் என்பதை முதலில் அறிந்து கொள்வது அவசியமாகும். 

அந்த வகையில் ஒவ்வொரு இந்திய குடிமகனின் தனித்துவ அடையாளமாக விளங்கக்கூடிய இந்த ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படுகிறது. அதாவது யூ ஐ டி ஏ ஐ என்பதால் இது ஒரு முக்கியமான ஆவணமாக திகழ்கிறது. 

dec 14 last date

ஆதார் அட்டை பெற்றிருந்தால் மட்டுமே புதிய சிம் கார்டு வங்கிக் கணக்கு அரசு மானியம் என அனைத்திற்கும் ஆதாரமாக இது இருக்கும் என்று சொன்னால் மிகையல்ல. 

இப்படி பல விஷயங்களில் பயன்படுத்தப்படும் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் சரியாக இருக்க வேண்டும். உங்கள் ஆதார் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் தவறாக இருந்தால் அதை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். 

குறிப்பாக பிறந்த தேதி செல்போனின் முகவரி போன்றவற்றை நீங்கள் புதுப்பிக்கலாம். இதற்காக யூ ஐ டி ஏ ஐ இணையதளத்தின் உதவியுடன் மை ஆதார் போர்ட்டிலிருந்து நீங்கள் எதை புதுப்பித்துக் கொள்ள முடியும் இதற்காக எந்த கட்டணமும் வசூல் செய்யப்பட மாட்டாது. 

name change

இந்த ஆதார் அட்டையை புதுப்பிக்க சில வழிமுறைகள் உள்ளது. ஆதார் அட்டையில் உள்ள பெயரை மாற்றலாம். அப்படி மாற்ற நீங்கள் இரண்டு முறை தான் வாழ்நாள் முழுவதும் மாற்ற பயன்படுத்த முடியும் என்ற உண்மையை உஷாராக பயன்படுத்துங்கள். 

உங்கள் பெயரை இரண்டு முறை தான் மாற்ற முடியும். அதை தவிர உங்கள் முகவரியை மாற்ற எந்த விதமான விதியும் இல்லை. அதை எத்தனை முறை வேண்டுமென்றாலும் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். 

update

பெரும்பாலான ஆதார் அட்டை கோரிக்கைகள் 30 நாளுக்குள் அங்கீகரிக்கப்படுகிறது. உங்கள் ஆதார் அட்டையை முடிக்க 90 நாள் ஆகும் என்றால் நீங்கள் 1947 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது யூ ஐ டி ஏ ஐ தொடர்பு கொள்ளலாம். 

இதை அடுத்து தற்போது ஆதார் அட்டையை புதுப்பிக்குமாறு யூ ஐ டி ஏ ஐ கேட்டுக் கொண்டுள்ளது.  10 ஆண்டுகள் பழமையான ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

அதுவும் 14 டிசம்பர் 2024-க்கு முன் உங்கள் ஆதார் அட்டையை புதுப்பிக்க எந்த கட்டணமும் வசூலிக்க படாது.  அது வரை இது இலவசமாகும்.

Summary in English : you’ve been keeping an eye on the latest Aadhar updation news, you might have heard that there’s a bit of a catch when it comes to changing your name. Yup, that’s right—you can only update your name on your Aadhar card two times in your entire lifetime.

Check Also

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

In a recent open talk, Rahul and Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul's drinking habits.