Wednesday , 22 January 2025

70 மணி நேரம் வேலை.. இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி அதிரடி!! மீண்டும் கொடுத்த விளக்கம்..

இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று இன்போசிஸ் நாராயண மூர்த்தி கடுமையாக கூறியதை அடுத்து அவருக்கு எதிராக பல்வேறு வகை விமர்சனங்கள் வெளிவந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நாராயணமூர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே பணியாளர்களின் பணி நேரம் குறித்து பல்வேறு வகையான கருத்துக்களை முன்வைத்ததை எடுத்து அது பேசும் பொருளாக மாறியது. 

மற்ற நாடுகளோடு இந்தியாவை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்தியாவின் வேலை உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது என்பதால் மற்ற நாடுகளோடு போட்டி போட நாம் தயாராக கூடுதலாக உழைக்க வேண்டும் என்று கூறி இருந்தார். 

அதாவது இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து சுத்தமாக குடும்பத்தாரோடு நேரத்தை செலவிட முடியாது எந்திர மயமான வாழ்க்கையாக மாறிவிடும்.

இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில் நாராயண மூர்த்தியின் கருத்து முதலாளித்துவ பார்வையில் இருப்பதாகவும் ஊழியர்கள் பற்றி அவர் எந்தவித நல்ல நோக்கத்தோடும் சிந்திக்கவில்லை என்று பேச்சுக்கள் பரவலாக இருந்தது. 

இதைத்தொடர்ந்து நாராயணமூர்த்தி தனது கருத்தில் இருந்து பின் வாங்காமல் தனது கருத்தை நியாயப்படுத்த கூடிய விதமாக கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய வர்த்தக சபையின் நூற்றாண்டு விழா தொடக்க விழாவில் பேசியிருக்கிறார். 

அதில் இந்தியாவை நம்பர் ஒன் நாடாக உருவாக்க கடினமாக உழைக்க வேண்டும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் உலகின் முன்னணி நிறுவனங்களோடு நமது நிறுவனத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று தான் கூறியதாக கூறியிருக்கிறார். 

மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது தான் வறுமைக்கு எதிரான ஒரு தீர்வாக அமையும். நம் நாட்டில் தான் 800 மில்லியன் மக்கள் இலவசமாக ரேஷன் பெறுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம் என்பது கோடி பேர் வறுமையில் இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம். 

வறுமையை ஒழிக்க வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தான் சிறப்பானது என்று நான் உணர்ந்து கொண்டேன் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் தொழில் அதிபர்களும் தேசத்தை கட்டமைக்கிறார்கள் என்பது எனக்கு புரிந்தது முதலீட்டாளர்களுக்கு செல்வத்தை உருவாக்குவதோடு வரியையும் செலுத்துகிறார்கள். 

மேலும் சிறப்பாக செயல்பட்டால் தான் அங்கீகாரம் கிடைக்கும் அங்கீகாரம் தான் மரியாதையை கொடுக்கும் மரியாதை உங்களுக்கு உரிய அதிகாரத்தை கொடுக்கும் நம் முன்னோர்களின் கனவில் நிறைவேற்ற இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

இந்தியர்களை விட சீனத் தொழிலாளர்கள் 3.5 மடங்கு ஆக்கப்பூர்வமாக செயல்படுகிறார்கள் முட்டாள்தனமான கருத்துக்களை எழுதி விட்டு பரிதாபகரமான நிலையில் உலகத்தால் ஒதுக்கப்படுவர்களாக மாறுவது எளிது இங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் நான் சொல்லுவது என்னவென்றால் உங்களின் மதிப்பை நீங்கள் உணர்ந்து வாழ்க்கையை அர்ப்பணித்து செயல்பட வேண்டும் என்பதுதான் என்று கூறி இருக்கிறார். 

இதை எடுத்து இந்த விஷயம் தற்போது வேகமாக இணையம் முழுவதும் பரவி அதிக அளவு பேசும் பொருளாய் மாறி உள்ளது. 

Summary in English: Recently, Infosys co-founder Narayana Murthy found himself in the spotlight again for his comments about the 70-hour workweek. In a world where work-life balance is often touted as essential, Murthy’s remarks sparked quite a debate. He defended his stance by emphasizing the importance of hard work and dedication, especially in the early stages of one’s career.

Check Also

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

In a recent open talk, Rahul and Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul's drinking habits.