மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு ஒரு நியாயம் மற்ற மாவட்ட மக்களுக்கு ஒரு நியாயமா என்று வட தமிழக மாவட்ட மக்களுக்கு ரூபாய் 2000 பிச்சை போடுகிறீர்களா என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து இருப்பது குறித்த பதிவு.
திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம் பிடித்துள்ளது இந்த நிகழ்ச்சி இந்த கட்சியின் தலைவராக வேல்முருகன் இருக்கிறார். இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக பணிபுரிவது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
அண்மையில் ஏற்பட்ட புயல் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகள் தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கிறது இதை அடுத்து வேல்முருகன் தமிழக அரசின் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.
அந்த வகையில் இது தொடர்பாக சட்டசபையில் பேசும்போதும் அவர் தொடர்ந்து ஆளும் திமுக அரசை வன்மையாக கண்டித்து விமர்சனம் செய்திருக்கிறார் இணையில் இவர் கடலூரில் பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டிகள் கூறிய விபரங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் பலவிதமான தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது இந்த தவறுகள் முதலமைச்சரின் கவனத்திற்கு போய் சேரவில்லை அதிமுக ஆட்சியிலும் திமுக ஆட்சியிலும் ஏரி தூர் வருவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் நடைபெற்றுள்ளது கேள்வி கேட்டால் கூட்டணி கட்சித் தலைவர்களை புறக்கணிப்பார்கள்.
அதுமட்டுமல்லாமல் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் அடிப்பதில் பாரபட்சம் காட்டப்படுகிறது, மழை வெள்ளம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பாதிப்பு கடலூரிலும் அதிகளவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இருக்கும் மக்களுக்கு மட்டும் மழை நிவாரணமாக 2000 ரூபாய் கொடுத்துவிட்டு மற்ற மாவட்ட மக்களுக்கு எந்த விதமான பயனும் இல்லாமல் இருப்பது எப்படி வட தமிழக மாவட்ட மக்களுக்கு 2000 ரூபாய் பிச்சை போடுகிறார்களா என்று கொந்தளித்து பேசி இருக்கிறார்.
Summary in English: In a recent turn of events, Velmurugan, the leader of the Tamilaga Valvurimai Katchi, has come out swinging against the DMK Nadu government over their handling of certain financial issues. He’s particularly vocal about the Rs. 2,000 that seems to be at the center of this debate. According to him, this amount isn’t just a number; it symbolizes deeper concerns regarding transparency and accountability within the government.