Wednesday , 22 January 2025

தெலுங்கு மக்கள் குறித்த அவதூறு பேச்சு!! நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்!

பொதுக்கூட்டம் ஒன்றில் தெலுங்கர்களுக்கு எதிராக பேசியதை அடுத்து கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கஸ்தூரி ஏறக்குறைய தென்னிந்திய சினிமா முழுவதும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

சினிமாவில் இவர் எதிர்பார்த்த பெரிய அளவு வெற்றியை பெற முடியவில்லை என்றாலும் முன்னணி நடிகர்கள் பலரோடு இணைந்து நடித்து ரசிகர்களை அதிகரித்துக் கொண்டார். 

அண்மைக்காலமாக தன்னை ஓர் சமூக அக்கறை உள்ள நபராக வெளிப்படுத்தக்கூடிய இவர் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இவர் தன்னுடைய பேச்சின் போது தெலுங்கு மக்களை அவதூறாக பேசியதை அடுத்து பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்தார். 

இதனை அடுத்து அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 

எஸ்சி, எஸ்டி மக்களை வன்கொடுமையில் இருந்து பாதுகாக்க பிசியா சட்டம் எப்படி உள்ளது அதுபோல பிராமணர்கள் மற்றும் பிற ஜாதியினரை வன்கொடுமையில் இருந்து பாதுகாக்க பி சி ஆர் சட்டம் தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தான் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு தேவையில்லாமல் பேசி வம்பில் மாட்டிக்கொண்டார். 

இதைத்தொடர்ந்து நடிகை கஸ்தூரியின் மீது மொத்தம் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் தான் அவ்வாறு பேசவில்லை என்று அவர் தன் கருத்துக்களை பதிவு செய்தார். 

அடுத்து அவர் பேசிய வீடியோக்களை காட்டி பகிரங்கமாக அவர் மீது அழிக்கப்பட்ட புகார்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்க போலீசார் மேற்கொண்ட முயற்சியை பார்த்து தலைமறைவானார். 

இதை அடுத்து இவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடித்து பொறி வைத்த கண்டுபிடித்த காவல்துறை அவரை கைது செய்வது. இந்நிலையில் முன் ஜாமீன் மனு கோரி நீதிமன்றத்தை நாடிய போது மனு தள்ளுபடி ஆனதை அடுத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

மேலும் நீதிமன்றத்தில் ஆஸர் செய்யப்பட்ட இவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று தனது வழக்கறிஞர் மூலம் நிபந்தனை ஜாமீனுக்கு அப்ளை செய்திருந்த இவர் தற்போது ஜாமீனை பெற்றிருக்கிறார்.

இந்த மனுவில் இவர்தான் தனித்து வசித்து வருவதாகவும் கணவரின் ஆதரவு இல்லை. குழந்தைகள் உள்ளது என்று கூறியதோடு மட்டுமல்லாமல் சென்னை வீட்டில் காவல்துறை சமன் நோட்டீஸ் ஒட்டியது தனக்கு தெரியாது எனக் கூறியிருந்தார். 

மேலும் தனது குழந்தைகளின் மனநிலை என்னை கைது செய்தால் பாதிக்கப்படும். எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். குழந்தைகளின் நலன் கருதியும் குழந்தை சிறப்பு குழந்தை என்ற காரணத்தால் அரசு தரப்பில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

Summary in English: In a surprising turn of events, Kasthuri has been released from jail on conditional bail! Fans and supporters are buzzing with excitement as they await more details about what this means for her moving forward. The conditions of her bail have yet to be fully disclosed, but it’s clear that many are hopeful for her next steps.

Check Also

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

In a recent open talk, Rahul and Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul's drinking habits.