Wednesday , 22 January 2025
digitalization

குடி..மகன்களுக்கு ஜாக்பாட்..! டாஸ்மாக் சூப்பர் திட்டம் இன்று முதல் அமுல்..

மதுப் பிரியர்களுக்கு என்று தமிழக அரசால் உருவாக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைகள் டிஜிட்டல் மயம் செய்யப்பட்டதை அடுத்து சூப்பர் திட்டம் வெளிவந்துள்ளது.

குடி குடியை கெடுக்கும், குடும்பம் சீர்குலைந்து போகும் என்று பல்வேறு சொற்றொடர்களை நாம் கூறினாலும் இன்று இருக்கும் தலைமுறை மதுவை விரும்பி தங்கள் வாழ்க்கையில் தண்ணீர் குடிப்பது போல மதுவை குடித்து வாழுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

sales

ஒரு காலத்தில் குடிப்பவரை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க கூடிய நல்ல பழக்கத்தைக் கொண்டிருந்த நம் நாட்டில் இன்று தெருவுக்கு ஒரு மது கடை வைத்து குடிக்கும் பழக்கத்தை இளைஞர்களின் மத்தியில் அதிகரித்திருக்கிறோம். 

குடி..மகன்களுக்கு ஜாக்பாட்..

அந்த வகையில் இரவு நேர பார்ட்டி துவங்கி கேளிக்கைகள், திருமண நிகழ்வுகள் என அனைத்து வைபவங்களிலும் இந்த மதுவுக்கு ஒரு முக்கிய இடம் கிடைத்துவிட்டது. 

இந்நிலையில் தமிழகத்தை பொறுத்த வரை மது விற்பனையை அரசே செயல்படுத்தி வருவதால் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் இந்த நிதி முக்கிய ஆதாரமாக உள்ளது என்று சொல்லலாம். 

தமிழகத்தில் 4829 டாஸ்மாக் கடைகள் மூலம் வருடத்திற்கு 45 ஆயிரம் கோடி ரூபாயும் நாள் ஒன்றுக்கு 120 கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனை செய்யப்படுகிறது. 

இதுவே பண்டிகை காலங்கள் என்றால் இந்த விற்பனை இரண்டு மடங்காக மாறும். ஏன் சில சமயங்களில் நான்கு மடங்கு அதிகரித்தாலும் ஆச்சரியம் இல்லை. இந்நிலையில் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டில்களுக்கு பத்து ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

இதை வேறு வழியின்றி குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூடுதல் பணம் கொடுத்து வாங்கிக் கொடுக்கும் நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசு ஒரு முடிவுக்கு வந்து விட்டது. 

அந்த வகையில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் என கணக்கிட்டாலும் ஒரு நாளைக்கு பல லட்சம் ரூபாய் கள்ளத்தனமாக குடிகாரர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. இந்த பணம் யாருக்கு செல்கிறது, எங்கு செல்கிறது என்பது ஒரு மிகப்பெரிய மர்மமாகவே நீடிக்கிறது. 

டாஸ்மாக் சூப்பர் திட்டம்..

எனவே இந்த தொடர் கொள்ளையை கட்டுப்படுத்தவும் இனி நடக்காமல் இருக்கவும் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

அந்த வகையில் இன்று முதல் டாஸ்மாக் நிறுவனம் டிஜிட்டல் மயமாகப்பட்டுள்ளது. அந்த வகையில் க்யூ ஆர் கோட் பதிப்பது ஸ்கேனர் இயந்திரம் வழங்குவது என டிஜிட்டல் மையம் ஆக்கப்பட்ட நிலையில் மது விற்பனை நடைபெற உள்ளது. 

அந்த வகையில் இதை டிஜிட்டல் மையமாக ரெயில் டெல் நிறுவனத்திற்கு 294 கோடி ரூபாய்க்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது இதை அடுத்து ராமநாதபுரம், அரக்கோணம் போன்ற பகுதிகளில் சோதனை அடிப்படையில் மதுபான கடைகளில் மது பாட்டிலுக்கு பில் வழங்கும் முறை படுத்தப்பட்டுள்ளது. 

இந்த வெற்றிகரமான சோதனை முயற்சிக்கு அடுத்து தற்போது சென்னை, சென்னை சுற்றிய புறநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் செயல்படும் அரசு மதுபான கடைகளில் மதுபானங்களுக்கு பில் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது அடுத்து நடக்கும் கொள்ளை தடுக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. 

digitalization

அதுமட்டுமல்லாமல் டாஸ்மாக் கடைகளில் பழைய மதுபாட்டுகள் அதிகளவு இருப்பதால் அதை விற்பனை செய்துவிட்டு இன்று முதல் கியூ ஆர் கோடு மூலம் பதிவு செய்து பில் வழங்கும் முறை நடைமுறைக்கு கொண்டு வர டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும் டிஜிட்டல் மையமாகும் நடைமுறை காரணமாக காஷ் பேமெண்ட், யூ பி ஐ பேமெண்ட், கார்டு பேமென்ட் மூலம் இனி பணத்தை செலுத்த முடியும் அந்த வகையில் பில்லில் உரிய தொகையை மட்டும் வழங்கினால் போதும் கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கும் முறை இருக்காது என நம்பப்படுகிறது. 

இந்தத் திட்டமானது தமிழகம் முழுவதும் டிசம்பர் மாதம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால் மது பிரியர்கள் சூப்பர் திட்டம் என்று சொல்லி குஷியில் இருக்கிறார்கள். 

Summary in English: In Tamil Nadu, the government has taken a big step towards modernizing the way TASMAC (Tamil Nadu State Marketing Corporation) operates by digitalizing sales. This means that instead of the old-school methods, they’re now using QR codes to streamline purchases at liquor stores. How cool is that?

Check Also

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

In a recent open talk, Rahul and Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul's drinking habits.