கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து வாகனங்கள் நீண்ட வரிசையில் நகர முடியாமல் நின்றது.
பொதுவாகவே சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வெளி மாநிலங்களுக்கு மாலை இரவு நேரங்களில் தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கும்.
அந்த வகையில் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று தனியார் ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தில் 57 பயணிகள் இருந்தார்கள்.
இந்த பேருந்தானது இரவு கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது இதில் ஒருவர் இறந்தார் மேலும் பலர் காயம் அடைந்தார்கள்.
இந்த விஷயத்தை அறிந்தவுடன் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணிகள் ஈடுபட்டதோடு காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இறந்தவரின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இதனை அடுத்து இந்த விபத்தானது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்ததை அடுத்து அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதோடு வாகனங்கள் பல நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தது.
எனினும் போக்குவரத்தை சீர் செய்ய காவல்துறையினர் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள் அடுத்து விரைவில் நெரிசல் தவிர்க்கப்பட்டு இயல்பு நிலை திரும்பும் என சொல்லலாம்.
Summary in English: Hey there, folks! So, we’ve got quite the story coming out of Cuddalore. Picture this: an omni bus, cruising along the Chennai-Trichy National Highway, suddenly finds itself caught in a massive traffic jam. It’s one of those days where everyone and their uncle seems to be on the road, right?
: