Wednesday , 22 January 2025

இரட்டை இலைக்காக போட்டா போட்டி.. டெல்லிக்கு பறக்கும் முக்கிய தலைகள்.. தேர்தல் ஆணையம் யார் பக்கம்!! பரபரப்பில் அதிமுக..

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக இன்று நேரில் ஆஜராகி பதிலளிக்க ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அது குறித்து விரிவான தகவலை இந்த பதிவில் படிக்கலாம். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ இ அ தி மு க இரண்டாக உடைந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற பரபரப்பு கட்சியினர் மத்தியில் நிலவியுள்ளது. 

இந்நிலையில் தேர்தல் ஆணையத்திடம் இருந்து நோட்டீஸ் பெற்றதை அடுத்து இரண்டு தலைகளும் டெல்லி விரைந்து உள்ளதாக செய்திகள் கசிந்து வந்தது. அதிமுகவின் அடையாளமான இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்குகள் ஓபிஎஸ், சசிகலா தரப்பால் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. 

எனினும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொது செயலாளராக பதவி ஏற்றது செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் வந்திருக்கும் இந்த வழக்கு அடுத்தடுத்து சூரியமூர்த்தி, பெங்களூர் புகழேந்தி உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தன. 

இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில் அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக கட்சி சட்ட திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டதால் தேர்தல் ஆணையத்திற்கு 2017 முதல் 2022 வரை புகார்கள் அளித்துள்ளதாக கூறியிருக்கிறார். 

மேலும் இந்த உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு அளித்த மனு மீது எந்த பதிலும் அளிக்கவில்லை. 

இந்நிலையில் இந்த மனுவின் மீதான விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை அடுத்து சூரிய மூர்த்தியின் மனு குறித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருக்கிறார்கள். 

அத்தோடு ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரது தரப்பிலிருந்தும் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக சின்னம் தொடர்பாக பொதுசெயலாளர் பழனிசாமி முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சூரியமூர்த்தி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் 19-ஆம் தேதிக்குள் எடுத்துபூர்வமான பதில் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லி உள்ளது. 

இன்று தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டு இருக்கக்கூடிய சூழலில் அனுப்பிய நோட்டீஸ்க்கு அதிமுகவின் பொது செயலர் என்ற வகையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் பதில் அனுப்பப்பட்டுள்ளது.

அதுபோல முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது வழக்கறிஞர் மூலமாக மின்னஞ்சலில் பதில் அனுப்பி இருக்கிறார். 

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு வழக்கறிஞர்கள் ஓ பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்கள் டெல்லிக்கு சென்று இருக்கிறார்கள் என்று விசாரணை நடைபெற்ற பிறகு இது தொடர்பான அறிக்கையை டெல்லி உயர் நீதிமன்றமும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

இதை அடுத்து இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் தரப்பும் இபிஎஸ் தரப்பும் பரபரப்பில் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. 

Summary in English: Today’s the day! OPS and EPS supporters are gearing up to show their presence at the Election Commission. The buzz is all about clarifying the AIADMK symbol, and you can feel the excitement in the air. It’s a big moment for both factions as they seek to solidify their stance and ensure everything is above board.

Check Also

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

In a recent open talk, Rahul and Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul's drinking habits.