Wednesday , 22 January 2025

அமித்ஷாவுக்கு உரிமையை தந்தது யார்?அம்பேத்கர் விவகாரத்தில் விவகாரம் பண்ணிய பா ரஞ்சித்..

மத்திய அமைச்சர் அமித்ஷா அம்பேத்கார் பற்றி தேசிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அவருக்கு யார் இந்த உரிமையை தந்ததே என்று இயக்குனர் பா ரஞ்சித் கேள்வி ஒன்றை எழுதி இருக்கிறார் அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

ஆனால் அம்பேத்காரை பேச அமித்ஷா யார் யார் இவருக்கு அந்த உரிமையை கொடுத்தது என இயக்குனர் பா ரஞ்சித் பேசியிருக்கும் விவகாரம் அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனத்தை தெரிவிக்க கூடிய வகையில் உள்ளது. 

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய பேச்சு தொடர்பாக பா ரஞ்சித்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அது தொடர்பான பதிலில் அவர் இதுபோல பேசுவதற்கு அமித்ஷாவுக்கு யார் உரிமை தந்தது அந்த உரிமையை வாங்கிக் கொடுத்ததே அம்பேத்கர் என்பதை உணர வேண்டும் என்று சொன்னார். 

மேலும் எந்த சக்தி நினைத்தாலும் அம்பேத்காரை தடுக்க முடியாது மீற முடியாது பாபா ஷாஹிப் அம்பேத்கருக்கு ஜெய் பீம் என ரஞ்சித் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே பா ரஞ்சித் அம்பேத்கார் பெரியார் ஆதரவாளராக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய கருத்தை பின்பற்றக்கூடியவர். 

மேடையில் பல விவகாரங்களில் மத்திய அரசை பா ரஞ்சித் கண்டித்திருக்கிறார் அதுபோல ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் தமிழக அரசையும் கண்டித்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். 

இந்நிலையில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா மாநில அவையில் பேசும்போது எதற்கெடுத்தாலும் அம்பேத்கர் அம்பேத்கார் என்று சொல்லுவது இன்று பேஷன் ஆகிவிட்டது அதற்கு பதில் கடவுளை நினைத்து அவர் பெயரை சொன்னால் புண்ணியத்தோடு, சொர்க்கமும் கிடைக்கும் என்று சொன்னது பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. 

இதை அடுத்து அமித் ஷாவுக்கு எதிராக பல கண்டன குரல்கள் வலுவாக எழுந்து வரக்கூடிய வேலையில் நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் ஜெய் பீம் ஜெய் பீம் என்று முழக்கமிட்டதால் அவையை தொடங்க தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. 

அண்ணல் அம்பேத்கார் இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்தை எப்படி சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி பாசிஸ்டுகள் அலைவதால் அம்பேத்கரின் பெயரை கேட்டாலே அவர்களுக்கு எரிச்சல் ஏற்படுகிறது. 

எனவே அவரின் புகழ் ஓங்கட்டும் அவரது பெயரை உரக்கச் சொல்வோம். அத்தோடு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது கண்டனத்தை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டித்து இருக்கிறார். 

இந்நிலையில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா தன் அம்பேத்கர் பற்றி பேசியது திரித்து பரப்பப்படுகிறது. எனது பேச்சை காங்கிரஸ் கட்சி திரித்துள்ளது என்று விளக்கம் அளித்தார்.

Summary in English: In a recent turn of events, Pa Ranjith has stepped up to condemn Amit Shah for his derogatory remarks about Dr. B.R. Ambedkar. It’s pretty clear that Ranjith isn’t holding back; he’s calling out the insensitivity and the lack of respect shown towards one of India’s most revered leaders. Ambedkar, who played a monumental role in drafting the Indian Constitution and championing the rights of marginalized communities, deserves nothing but honor.

Check Also

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

In a recent open talk, Rahul and Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul's drinking habits.