Wednesday , 22 January 2025

அமைச்சர் பொன் முடி மீது மக்கள் கோபம்.. கலெக்டரையும் விடாமல் செய்த செயல்.. விழுப்புரத்தில் பரபரப்பு..

நெஞ்சில் புயலால் கன மழை பெய்த விழுப்புரம் மாவட்டம் தண்ணீரில் மூழ்கியுள்ளது இதனை அடுத்து அங்கு ஆய்வு செய்ய வந்த அமைச்சர் பொன்முடி மற்றும் கலெக்டர் பழனி ஆகியோர் மீது மக்கள் சேற்றை வாரி இறைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த இரண்டு நாட்களுக்கு மேடாக புயலின் தாக்கத்தால் கடுமையான மழை வட மாவட்டங்களில் பெய்து வருவதை அடுத்து பெருத்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது சென்னை உட்பட தமிழக பகுதி கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. 

குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் மாவட்டத்தில் மயிலத்தில் அதிகபட்சமாக 51 cm மழை கொட்டி தீர்த்தது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் திண்டிவனம் உள்ளிட்ட பாடப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

மேலும் வீடுகள் கடைகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள் பல இடங்கள் பார்ப்பதற்கு குட்டி தீவுகளை போல காட்சி அளிக்கிறது. 

மழை நீர் புகுந்துள்ளதால் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டு விவசாயிகள் கண்ணீர் விடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு குழுவினர் காவல் துறை தீயணைப்புத் துறையினர் ஒன்றாக இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்நிலையில் விழுப்புரம் பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட அமைச்சர் பொன்மொழி சென்றிருக்கிறார். அவருடன் அவரது மகனும் கள்ளக்குறிச்சி முன்னாள் எம் பி யும் கௌதம் சிகாமணி விழுப்புரம் கலெக்டர் பழனி உட்பட பலரும் சென்றார்கள். 

இவர்களைப் பார்த்து கடுப்பாகி போன பொதுமக்கள் அங்கிருந்த சேற்றை வாரி இறைத்தார்கள் இதில் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கௌதம் சிகாமணி கலெக்டர் பழனி மீது சேவை சேற்றை வாரி இறைத்த நிலையில் சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று கூறி புலம்பினார்கள். 

இதனைத் தொடர்ந்து இவர்களை காரில் பத்திரமாக மக்களின் தாக்குதலில் இருந்து பாதுகாத்து போலீசார் அனுப்பி வைத்தார்கள் இது தொடர்பான வீடியோக்கள் இணையங்களில் வெளிவந்து பரபரப்பாக பேசப்படுகிறது. 

Summary in English: In a surprising turn of events, Minister Ponmudi and Collector Palani found themselves in the middle of a bit of chaos while trying to visit flood-affected areas. Instead of a warm welcome, they were met with mud—literally! As they approached the site, some locals decided to express their frustrations in an unconventional way by throwing mud at them. It’s clear that emotions are running high in the community as people grapple with the aftermath of the floods.

Check Also

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

In a recent open talk, Rahul and Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul's drinking habits.