தீபாவளி என்று திரைக்கு வந்த அமரன் திரைப்படம் மாஸ் வசூலை செய்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவை அடுத்து தமிழக தியேட்டர் ஒன்றில் வெடிகுண்டு வீச்சு நடைபெற்று உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அலங்கார் திரையரங்கின் காம்பவுண்ட் சுவருக்குள் இரண்டு மர்ம நபர்கள் இன்று அதிகாலை 3 மணி அளவில் பெட்ரோல் குண்டை வீசி இருக்கின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தாக்குதலின் போதும் யாருக்கும் எந்த விதமான காயமும் உயிர் சேதமும் தியேட்டருக்கு எந்த ஒரு பொருள் சேதமும் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதை அடுத்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை அடுத்து மேலப்பாளையம் பகுதி முழுவதும் மிகவும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் அங்கு இருக்கும் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அத்தோடு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி வெளிவந்த அமரன் திரைப்படம் குறித்து அதிக அளவு சொல்ல வேண்டாம்.
தீபாவளி என்று திரைதுறைக்கு வந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றதோடு ரசிகர்கள் பொதுமக்கள் திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் ஈந்த படத்தைக் குறித்து பாராட்டுதல்களை தெரிவித்து இருந்தார்கள்.
எனினும் உயர்ந்த படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
மேலும் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு பயோபிக் திரைப்படமாக வெளிவந்திருக்க கூடிய இந்த படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை முழுமையாக சித்தரிக்கப்பட்டு இருந்தாலும் முஸ்லிம்களின் மீது வெறுப்பை விதைக்கும் ஒரு கதைக்களத்தை கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் காஷ்மீரில் வாழும் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக இந்த படம் சித்தரித்துக் காட்டி இருக்கிறது. மேலும் தேசிய சுதந்திரத்திற்காக முழக்கப்பட்ட விடுதலை முழக்கமான ஆஷாதி கோஷம் என்ற முழக்கத்தை பயங்கரவாத முழக்கமாக இந்த படத்தின் காட்டி இருக்கிறார்கள்.
ஆர் எஸ் எஸ் மற்றும் பஜ்ரங்கல் போன்ற அமைப்புகள் பயன்படுத்தக்கூடிய ஜெய் பஜ்ரங் படி என்ற கோஷம் இராணுவத்திற்கு பயன்படுத்தக்கூடிய கோசமாக காட்டப்பட்டு இருக்கிறது என எஸ் பி பி ஐ கட்சி குற்றம் சாட்சி போராட்டங்களை செய்தது.
இந்த நிலையில் மேலப்பாளையம் அலங்கார் திரையரங்கு சுவருக்குள் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு நெல்லை முழுவதும் இது குறித்த பேச்சுக்கள் பேசும் பொருளாய் மாறி உள்ளது.
Summary in English: In a shocking turn of events, a petrol bomb was thrown at an Amaran movie screening theatre in Tirunelveli, stirring up quite the buzz in the local community. Imagine settling in for a night of entertainment, popcorn in hand, when chaos erupts! Thankfully, no one was seriously injured, but it’s hard to believe that something like this could happen over a film.