ஈரோட்டை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ராகுல் என்பவர் அண்மையில் நடந்த பைக் விபத்தில் மரணம் அடைந்தது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. அது குறித்து பார்க்கலாம்.
வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகைகளுக்கு இணையாக தற்போது இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர்களின் நிலை உள்ளது. அந்த வகையில் ராகுல் என்பவர் தலையில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தற்போது செய்திகள் பரவி வருகிறது.
இதை அடுத்து ராகுலின் தம்பி வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த தகவல் தவறானது என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார். அவர் அந்த வீடியோவில் கூறியது ராகுல் ஹெல்மெட் அணிந்திருந்தார் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் நடுவில் உள்ள தடுப்பில் மோதியதே விபத்திற்கு காரணம் என்று சொல்லியிருக்கிறார்.
மேலும் விபத்தின் தாக்கத்தால் ராகுலின் ஹெல்மெட் அவரது தலையில் இருந்து கழட்ட முடியாத அளவிற்கு லாக் ஆகி இருந்தது. ஹெல்மெட் அணிந்தும் இப்படி பெரிய விபத்து ஏற்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனவே ஹெல்மெட் அணியாமல் சென்றது தான் விபத்துக்கு காரணம் என்று சொல்வது முற்றிலும் தவறானது. இந்த வீடியோ மூலம் ராகுல் ஹெல்மெட் அணிந்திருந்தார் என்பதும் அதிவேகமே விபத்துக்கு காரணம் என்பது ஊர்ஜிதம் செய்யப்படுகிறது.
எனவே இது போன்ற தவறான தகவல்கள் பரவுவதை தவிர்க்கும்படி அவரது சகோதரர் தாழ்மையோடு அனைவரிடமும் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்ற விஷயம் தற்போது வைலாகிவிட்டது.
Summary in English: It’s always tough to hear about the passing of someone who has made an impact, and the recent news about Rahul Tiky has left many in shock. While details are still emerging, it seems that his death was unexpected, and fans are grappling with their feelings of loss.