வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான பெஞ்சல் புயலில் பாதிப்படைந்து பல்வேறு மக்கள் நிவாரணம் கிடைக்காமல் தடுமாறி வரும் சூழலை தவெக தலைவர் விஜய் வன்மையாக கண்டித்து சொல்லி இருக்கும் விஷயங்கள்.
தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் பெஞ்சில் புயலின் விளைவாக கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது இதனால் இயல்பு நிலைக்கு மாறாக மழைப்பொழிவு அதிகமாக இருந்ததை அடுத்து பொதுமக்கள் பலரும் பல்வேறு வகையில் சிரமப்பட்டு வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் தனது கட்சி அலுவலகத்தில் நிவாரண உதவியை வழங்கிய நிலையில் இது குறித்து சில அறிக்கைகளை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த அறிக்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோ ஆபத்தான சூழ்நிலையில் மக்களை கைவிடுவது என்பது தொடர்கதையாக உள்ளது.
நம்மை எப்படியும் காப்பார்கள் என்று நம்பிக்கையோடு வாக்களித்த மக்களுக்கு இது போன்ற பேரிடர் காலங்களில் தற்காலிக உதவிகளை செய்து வருவதோடு நின்று விடுகிறார்கள் இதற்கான நிரந்தர தீர்வை முறையான திட்டங்களாக தீட்டவில்லை.
அது மட்டுமல்லாமல் குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கூட செய்யாமல் இருப்பது சுயநல ஆட்சியாளர்கள் என்பதை சுட்டிக்காட்டி விட்டது.
ஒவ்வொரு வருடமும் வரும் புயல் மற்றும் பேரிடம் போது இது ஒரு சம்பிரதாய நிகழ்வாக நடக்கிறது நேரம் மக்களை ஆண்ட சமயத்தில் சந்தித்து விட்டு செல்வதால் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா? அத்தோடு மக்களை அந்த நாளோடு மறந்து விடுவது நியாயமா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
பொது மக்களுக்கு முதலில் தேவையான அடிப்படை பாதுகாப்பு தேவைகளை நிறைவேற்றக்கூடிய தார்மீக கடமை ஆளுகின்ற ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கும் இருக்கிறது இதை ஏன் அந்த ஆட்சியாளர்கள் முழுமையாக மறந்து விடுகிறார்கள் இது நிச்சயமாக வேதனை அளிக்கக்கூடிய விஷயம்.
மேலும் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் பாதுகாப்பு சார்ந்த எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுப்பதில்லை வெறும் தற்காலிக கண்துடைப்பு மட்டுமே செய்யப்படுகிறது இவ்வாறு செய்வதை ஆட்சியாளர்கள் வாடிக்கையாக கொண்டு இருப்பது மிகுந்த வேதனையை தருகிறது.
இதுபோல மக்களை ஏமாற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று மமதையில் இருக்கக்கூடியவர்கள் அரசியல் சிம்மாசனத்தில் நிலைத்து இருப்பதில்லை. அது மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகளின் மீது ஏளனமான விமர்சனத்தை வைத்து காவி வர்ணம் பூசி கபட நாடகமாடி தப்பித்துக் கொள்கிறார்கள்.
எனவே இனிவரும் காலங்களில் இது போன்ற முயற்சிகள் அனைத்தும் மக்கள் சக்தி முன் தோற்றுப் போகும் இது இனிவரும் காலங்களில் உணர்த்தப்படும்.
எனவே இது போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் தமிழகத்திலும் புதுவையிலும் உள்ள தமிழக வெற்றிக்கழகத் தோழர்கள் இயன்ற அளவு உதவிகளை மக்களுக்கு செய்ய வேண்டும் அவர்களுக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருங்கள்.
என் நெஞ்சில் குடியிருக்கும் கழகத் தோழர்களே நீங்கள் உண்மையான மக்கள் பணி செய்யும் நேரம் இது இதனை உணர்ந்து நீங்கள் செயல்படுங்கள் வீடு வீடாக சென்று குடிநீர் பால் பிஸ்கட் உணவு, ரொட்டி மடக்கிப் பொருட்கள் போன்றவற்றை வழங்கி உங்களுடைய பங்களிப்பை செய்தது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் நம் கழகம் சார்பில் அனைவரும் மக்களோடு மக்களாய் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கூறி இருக்கிறார்.
Summary in English: In a recent outburst, TVK leader Vijay didn’t hold back when it came to criticizing the Tamil Nadu government over the rain and flood damage that has been wreaking havoc in the state. He pointed fingers at the authorities for their lack of preparedness and response during these challenging times. With heavy rains causing significant destruction, Vijay argued that the government’s failure to act effectively has left many residents in dire straits.