Wednesday , 22 January 2025
cm

என்னடா சொல்றீங்க.. ரேஷன் கார்டு வச்சிருக்கிறவங்க எல்லாத்துக்குமே ரூ 1,000 உரிமை தொகையா? வாய் பிளந்த தமிழக மக்கள்..

திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பிறகு ₹ 1000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது தற்போது ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் என அமைச்சர் ராமச்சந்திரன் பேசுவது போல வைரல் வீடியோ ஒன்று வெளிவந்து அதற்கான விளக்கம் அளித்திருக்கிறார். 

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று உறுதி அளித்த நிலையில் இந்த திட்டமானது செப்டம்பர் 15-ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. 

இந்தத் திட்டத்தின் கீழ் ஒன்று 15 கோடி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

 தற்போது இதன் பயனாளிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு 1.62 கோடி மகளிர் இதன் மூலம் நன்மை அடைகிறார்கள். 

இந்தத் திட்டமானது குடும்ப வருமானம், குடும்ப பொருளாதாரம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு வழங்கப்பட்டு வரும் நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த தொகை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஆர்ப்பரித்தது. 

இதைத் தொடர்ந்து இந்த திட்டம் தமிழகத்தில் முதல் முறையாக செயல்படுத்தி விட்டு நிலையில் தற்போது தேசிய கட்சிகளாக திகழும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இந்த திட்டத்தை வேறு மாநிலங்களில் தங்களின் வெற்றிக்கான வாக்குறுதியாக கொடுத்து வருகிறார்கள். 

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து பேசிய தமிழக வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் 20 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியையும் 14 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்தார். 

அந்தக் கூட்டத்தில் அவர் பேசும்போது வருகின்ற ஜனவரி மாதம் முதல் இந்த தொகையானது மேலும் சில பெண்களுக்கு கிடைக்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக பேசியிருக்கிறார். 

இதில் வருகின்ற ஜனவரி மாதம் முதல் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்பது போல மக்கள் அனைவரும் புரிந்து கொண்டதை அடுத்து இந்த வீடியோவானது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. 

இதனை அடுத்து ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசளித்து தகுதி உள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத நிலையில் இந்தத் தொகையை வழங்க வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கமாகும். 

Summary in English: In a recent buzz, X Minister Ramachandran has shed light on the much-talked-about Magalir Urimai Thogai scheme, and it’s got everyone buzzing! So, what’s the scoop? According to him, this initiative is set to benefit all ration card holders. That’s right—if you’ve got a ration card, you might just be in for some good news!

Check Also

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

In a recent open talk, Rahul and Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul's drinking habits.