தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் அவற்றுக்கு எதிராக எத்தகைய சட்டதிட்டங்களை கொண்டு வந்தாலும் அவை கட்டுக்குள் இல்லை என்று சொல்வதற்கு உதாரணமாக அண்ணா பல்கலைக்கழக விஷயம் அமைந்துவிட்டது.
இது தொடர்பாக கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமான விசாரணையை மேற்கொண்டு இருக்கிறார்கள். மேலும் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் பல பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருவது உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.
சென்னை கிண்டியில் அமைந்திருக்க கூடிய இந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த நடக்க கூடாத சம்பவம் நடைபெற்று திக், திக் நிமிடங்களாக பலர் மத்தியிலும் பேசும் பொருளாக மாறி உள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் வந்து படித்து வருகிறார்கள். பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவர்களுக்கு தங்கும் விடுதி உள்ளது.
எனினும் சில மாணவ, மாணவிகள் வெளி இடங்களிலும், ஹோட்டல்களிலும், வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வருவது பலரும் அறிந்த உண்மைதான்.
மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் எப்போதுமே பாதுகாப்பு நிறைந்து இருக்கும். யாரும் எளிதில் நுழைவது சாத்தியம் அல்ல. இப்படி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இயங்கி வரும் பல்கலைக்கழகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு காரணம் இந்த பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறையில் மாணவி ஒருவர் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த 19 வயதான இவர் இந்த கல்லூரி விடுதியில் தங்கி படிக்கிறார்.
அதுபோலவே கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவருடன் பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் ஒரு கட்டத்தில் காதலாக மலர்ந்து விட்டது.
இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இருவரும் மறைவான இடத்தில் சந்தித்து பேசிக்கொண்டு இருந்த சமயத்தில் தான் அந்த மாணவிக்கு இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் அங்கு வந்த இரண்டு பேர் காதலனை பலமாக தாக்கியதோடு மட்டுமல்லாமல் அந்த மாணவியை மிரட்டி அவருடைய உடைகளை கழட்டி வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்திருப்பதோடு மாணவியை பலமாக தாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் பயந்து போன அந்த மாணவி காதலன் மூலம் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதை அடுத்து புகார் பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிரவாத விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்காக பாரதிராஜன் அவர்கள் தலைமையில் தனியாக விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிர படுத்தப்பட்டு இருப்பதோடு பலத்த பாதுகாப்பு கொண்ட பல்கலைக்கழக வளாகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதே என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதே சமயத்தில் கல்லூரியிலேயே இருக்கும் மாணவர்கள் அல்லது ஊழியர்கள் யாரேனும் இது போன்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டார்களா? அல்லது இரண்டு நபர்கள் மட்டும்தான் இதில் சம்பந்தப்பட்டவர்களா? கல்லூரியில் வேலை செய்யும் நபர்கள் யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா? அல்லது வெளியிலிருந்து ஆட்கள் வந்து இதை செய்தார்களா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
அத்தோடு இந்த சம்பவம் நடைபெற்ற சமயத்தில் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்று கண்டுபிடிக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இது சம்பந்தமாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் காவல்துறையில் இன்னும் ஒரு நபரை தேடும் பணியில் ஈடுபட்டு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
Summary in English: The recent sexual assault case at Anna University in Kotturpuram has stirred up a lot of conversations and emotions within the community. As the police investigation unfolds, many are eager to see justice served and to understand how such incidents can be prevented in the future.