தமிழ்நாட்டில் சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டது அதுபோல வடகடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கிடைத்துள்ளது.
தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பின்படி நேற்று மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் எழுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் நிலவு வருவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு திசையில் இருந்து நகர்ந்து படிப்படியாக வழு இழக்கக்கூடும்.
இதனால் நாளை 14.12. 2024 அன்று தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டலம் மேல் அடுக்கு சுழற்சி நிலவ இருக்கும் காரணத்தால் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும்.
இது மேற்கு வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் நகரக்கூடும் எனவே இன்று 13. 12. 2024 தென் தமிழகத்தில் பல பகுதிகளிலும் வட தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும்.
இதை திருநெல்வேலி மாவட்டத்தில் ஓர் இடங்களில் அதிக கனமழையும் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிதமடை வரை இருக்கலாம்.
மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய அதிகளவு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த மழையானது நாளை டிசம்பர் 14ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு பகுதிகளிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதுபோல டிசம்பர் 15ஆம் தேதி தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் கனமழை வரை பெய்யலாம் டிசம்பர் 16ஆம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக பகுதிகளிலும் தமிழகத்தின் உள்பகுதிகளில் சிலவற்றில் இடியுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அத்தோடு டிசம்பர் 17ஆம் தேதி தமிழகத்தின் அநேகமாக பல பகுதிகளில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிடம் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
கன மழைக்கான வாய்ப்பு கடலூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளிலும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை ,திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் புதுவையின் சில பகுதிகளிலும் கனவடக்கான வாய்ப்பு உள்ளது.
மேலும் டிசம்பர் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும் கனமான மலைக்கும் வாய்ப்புகள் உள்ளது என்று சொல்லலாம். அது போலவே புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.
Summary in English: Great news for everyone in the southern districts of Tamil Nadu! The red and orange warnings that had been causing some concern have finally been lifted. It looks like the weather is starting to calm down, and we can all breathe a sigh of relief.