தமிழகத்தில் தக்காளி விலை உச்சத்தை தொட்ட போது என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி தற்போது கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி அதிரடியாக விலை சரிந்து 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தினமும் அண்டை மாவட்டங்களில் இருந்து தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் அளவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதற்கு காரணம் தக்காளி வரது குறைந்ததை அடுத்து தான் இவ்வாறு ஏற்பட்டதாக பல வியாபாரிகள் கூறி இருந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை அதிரடியாக சரிந்துள்ளது.
அதன்படி தற்போது ஒரு கிலோ தக்காளி பதினெட்டு ரூபாய் முதல் அதிகபட்சம் 25 ரூபாய் வரை விற்பனையாகிறது மேலும் சிலரை விற்பனையில் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இனி அடுத்தடுத்து வரக்கூடிய நாட்களில் தக்காளி விலையில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் மேலும் விலை ஏற்றம் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
தக்காளியால் எண்ணற்ற பதார்த்தங்களை செய்யக்கூடிய இல்லத்தரசிகள் தக்காளி விலை ஏற்றத்தால் சற்று கவலை அடைந்து இருந்தார்கள்.
தற்போது விலை குறைந்ததை அடுத்து மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது.
Summary in English: Hey there, folks! If you’re a fan of fresh produce, you might want to sit down for this one. The tomato rates at the Chennai Koyambedu market have taken quite a nosedive recently! Yep, you heard it right—those juicy red beauties that usually make your wallet feel a little lighter are now more affordable than ever.