மதிமுகவின் பொது செயலாளர் வைகோ மீண்டும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் பதட்டம் நிலவுகிறது.
மதிமுக வின் பொதுச்செயலாளர் வைகோ தற்போது சென்னை அப்பனோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை பாதிப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான விஷயங்களை அறிந்து கொள்ள தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் அவரது மகன் துரை வைகோ அவர்களது தந்தையின் உடல்நிலை பற்றி கூறிய விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
திமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்த வைகோ கலைஞர் மீது ஏற்பட்ட கோபத்தால் 1992 ஆம் ஆண்டு அந்த கட்சியில் இருந்து விலகி மதிமுக என்ற கட்சியை ஆரம்பித்தார்.
இந்நிலையில் இவர் மீது கொண்ட பற்றின் காரணமாக பல மூத்த நிர்வாகிகள் திமுகவில் இருந்து விலகி வைகோவின் கட்சியில் இணைந்தார்கள். எனினும் தேர்தல் சமயத்தில் இவர் வெற்றி பெறாமல் பின்னடைவை தான் சந்தித்தார்.
இதனை அடுத்து கட்சித் தொண்டர்களில் இருந்து நிர்வாகி வரை தேர்தல் பின்னடைவு காரணத்தால் அதிருப்தி ஏற்பட்டு ஒரு கட்டத்தில் திமுகவோடு கூட்டணியை அமைத்தார்கள்.
தற்போது வயது முதிர்வு காரணமாக வைகோவின் உடல்நிலை பாதிப்படைந்துள்ளது.இதனை அடுத்து பெரும்பாலான அரசியல் நிகழ்வுகளை தவிர்த்து வந்த இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டு மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில் தற்போது அவர் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து கட்சித் தொண்டர்களின் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வைகோவின் உடல் நிலையை நினைத்து தொண்டர்கள் கவலைப்பட்ட நிலையில் அவரது மகன் துரை வைகோ கூறுகையில் தோள்பட்டையில் ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சியின் ஒரு பகுதியாக மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று கூறினார்.
இதை அடுத்து தொண்டர்களின் மத்தியில் இருந்த பரபரப்பு சற்று தணிந்து உள்ளது எதை சொல்லலாம்.
Summary in English: Vaiko, has been admitted to the hospital for shoulder treatment. It’s a bummer to hear, but we all know how important it is to take care of ourselves. Shoulder issues can be a real pain—literally!