Wednesday , 22 January 2025

விக்கிரவாண்டியில் விடிய விடிய மழை!! ஹைவேயில் பாய்ந்த வெள்ளம்.. பதட்டத்தில் மக்கள்..

தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கனமழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. 

பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் விக்கிரவாண்டியில் விடிய விடிய இடைவிடாமல் மழை பெய்தது அடுத்து பல இடங்கள் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. 

மேலும் போக்குவரத்துக்கு பயன்படும் விக்கிரவாண்டி வீசாலையிலும் வெள்ளம் பாய்ந்து ஓடியதால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்தபடி ஊர்ந்து சென்றது. 

இதனால் சாலையில் பயணம் மேற்கொண்டவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள் வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் 21ஆம் தேதி மதியம் புயலாக மாறியது. 

இதை அடுத்து நேற்று முன்தினம் மாலை 5:30 மணி அளவில் புதுச்சேரி மரக்காணம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க துவங்கியது அப்படி கரையை கடக்க துவங்கியதில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. 

குறிப்பாக மரக்காணம் பகுதியை புயல் நெருங்கிய போது சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து 70 கிலோமீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரை சூரைக்காற்று வீசியது. இந்நிலையில் புயல் கரையை கடந்த பின்னும் அதன் ஆட்டம் அடங்கவில்லை. 

இதனால் புதுவையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து இருப்பதால் ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஆறு மணியில் இருந்து நேற்று மாலை 6 மணி வரை 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக மயிலத்தில் 51 cm அடையும் திண்டிவனத்தில் 37 சென்டிமீட்டர் மறையும் பதிவாகியுள்ளது. 

இந்நிலையில் தான் விக்கிரவாண்டியில் விசாலையில் சென்டர் மீடியனை உடைத்தபடி வெள்ளம் பாய்ந்த ஓடியது. விழுப்புரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் மீட்பு பணிகள் தற்போது முறுக்கி விடப்பட்டுள்ளது. 

இதை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகளவு மழை கொட்டி தீர்த்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சில மாவட்டங்களுக்கு மட்டும் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

Summary in English: Wow, Villupuram has been hit hard with some serious rain lately! Vikaravandi streets are practically swimming pools right now. It’s wild to see how quickly the water has risen, turning normal roads into rivers. People are navigating through the flooded streets, and it’s both a sight to behold and a bit concerning.

Check Also

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

In a recent open talk, Rahul and Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul's drinking habits.