Wednesday , 22 January 2025

ஏன் இந்த அவசரம்? நிதானமா யோசிங்க.. தவெக தலைவர் விஜய்க்கு அட்வைஸ் பண்ணிய அரசியல் பிரபலங்கள்..

தவெக தலைவர் விஜய்க்கு சில நெருக்கமான அரசியல் நண்பர்கள் தற்போது அறிவுரை சொன்னதாக சொல்லப்படுகின்ற விஷயங்கள் வேகமாக இணையங்களில் பரவி வருகிறது அது குறித்த தகவல்.

தமிழகத்தில் அண்மையில் பெஞ்சல் புயல் மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கும். இதனை அடுத்து தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய் இதுவரை பெஞ்சில் புயல் தொடர்பாக எந்த ஒரு பேட்டியையும் அளிக்கவில்லை. 

அதுமட்டுமல்லாமல் புயலினால் பாதிப்படைந்த பகுதிகளை நேரில் சென்று பார்க்காமல் இருக்கிறார். குறிப்பாக சென்னையில் இருக்கும் இவர் சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை கூட நேரில் சென்று பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் பெஞ்சல் புயல் தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் திருவண்ணாமலையில் தீபமலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில் பலர் சிக்கி சடலமாக மீட்கப்பட்ட செய்தி பதற வைத்தது என்று சொல்லி இருக்கிறார். 

மேலும் உறவுகளை இழந்து தவிப்பவர்களுக்கு அனுதாபத்தை தெரிவித்து கொண்டதோடு இறந்து போனவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாக கூறிய விஷயம் பலரது மனதையும் சாந்தப்படுத்தியது. 

இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் அரசை தாக்கக் கூடிய வகையில் சரியாக மீட்பு பணி செய்யப்படவில்லை என்று சொன்னதோடு பேரிடர் காலத்தில் செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களும் தயாராக இருந்ததா? என்பது போன்ற பல கேள்விகளை அறிக்கை வழியாக கேட்டிருந்தார். 

இதற்கு மேலாக இந்த புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் பெற பனையூருக்கு வரை சொல்லி அங்கு வைத்து நிவாரண உதவிகளை செய்திருக்கிறார். அத்தோடு தான் சென்றால் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் தான் போகவில்லை என்று ஒரு சப்பைக்கட்டையும் கட்டி இருக்கிறார். 

பொது வாழ்வில் நுழைந்து விட்டால் எப்போதும் களத்தில் மக்களை சந்திக்க வேண்டும் கூட்டத்தை சமாளிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி எஸ்கேப் ஆக கூடாது. 

இதனை சுட்டிக்காட்டி அரசியலில் பிரபலமாக இருக்கும் சில பிரபலங்கள் இப்படி பண்ணினால் பனையூர் கிட்டத்தட்ட விஜயின் கொடநாடு போல மாறிவிடும். எனவே விஜய் வீட்டுக்குள் முடங்கி கிடப்பது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று விமர்சனம் செய்திருக்கிறார்கள். 

மேலும் எதற்கெடுத்தாலும் அவசரப்பட்டு முடிவு எடுக்காமல் இனிமேலாவது யோசித்து சிந்தித்து நடத்தால் மட்டும்தான் அரசியலில் ஜெயிக்க முடியும் என்று பல அரசியல் நண்பர்கள் அவருக்கு அட்வைஸ் பண்ணி இருக்கிறார்கள். இதனை விஜயும் ஏற்றுக்கொண்டு இனிவரும் காலங்களில் பக்குவமாக நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Summary in English: Recently, Tamilaga Vetri Kazhaga Vijay has been stirring up quite a buzz with his latest moves in the political arena. His friends in the political circle have had some interesting things to say about it!

Check Also

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

In a recent open talk, Rahul and Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul's drinking habits.