அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக அதிகரித்திருக்கும் தாக்குதல்கள் பற்றி பல்வேறு விஷயங்களை படித்திருப்பீர்கள் இதனை அடுத்து அங்குள்ள சில பிராந்தியங்களை ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி இருக்கிறார்கள் அவர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நம் நாட்டின் அருகில் இருக்கும் வங்கதேசத்தில் எப்போது ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது அப்போது இருந்தே ஒரு குழப்பமான சூழல் நிலவி வருவதோடு இடைக்கால அரசு அமைந்தும் தொடர்ந்து சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடந்த வண்ணம் உள்ளது.
இதில் குறிப்பாக இந்துக்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து உள்ளதால் நாட்டில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று சொல்லலாம் இஸ்கான் துறவியை கைது செய்து சிறையில் அடைத்து விட்டதை அடுத்து நிலைமை மோசமாக மாறியது.
இந்த சூழ்நிலையில் தான் அங்கு இருக்கக்கூடிய சில பிராந்தியங்களை ஆர்கன் கிளர்ச்சிகாலர்கள் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த கிளர்ச்சியாளர்கள் யார் அவர்களின் பின்னணி என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
மேற்கு மியான்மாரின் ரக்கைன் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் இந்த ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு ராணுவ குழு மியான்மரில் பல பகுதிகளை கைப்பற்றியது அந்த வகையில் மியான்னரில் பல்வேறு கிளட்ச் காரர்கள் இருக்கும் நிலையில் அவர்களை காட்டிலும் அதிக பகுதிகள் இந்த ஆர்கன் கிளர்ச்சியாளர்களிடம் உள்ளது.
1780கள் வரை ஆர்கன் என்பது ஒரு தனியாக செயல்படும் ராஜ்ஜியமாக இருந்தது இதை அடுத்து 1784 ஆம் ஆண்டு மியான்மாரின் மன்னர்களால் ஆர்கன் ராஜ்ஜியத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள் இதற்கிடையே சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்கான தனி தேசத்தை உருவாக்கும் கனவோடு இவர்கள் இருக்கிறார்கள்.
மேலும் நவீன ஆர்கன் கிளர்ச்சிப்படை என்பது 2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது இதை மாணவர் அமைப்பை சேர்ந்த முன்னாள் செயல்பாட்டாளர் ட்வான் ம்ராட் நயிங் என்பவர் தொடங்கி இருக்கிறார். இந்த அமைப்பு சுமார் 10 ஆண்டுகள் வரை பெரிய அளவில் செயல்பாடுகள் ஏதும் இல்லாமல் இருந்தது.
இதைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மியான்மர் ராக்கைன் பகுதியில் இருந்த நான்கு போலீஸ் நிலையத்தை குறிவைத்து பெரிய அளவு தாக்குதலை நடத்தி அந்த நாட்டின் சுதந்திர தின போராட்டத்தின் போது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
மேலும் இந்த கிளர்ச்சியாளர்கள் மெல்ல மெல்ல வளர்ந்து 2021 ஆம் ஆண்டு மியான்மரில் இருந்த மக்கள் ஆட்சி தவிர்க்கப்பட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு ஆர்கன் அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார்கள்.
அவற்றோடு அவ்வப்போது ராணுவத்தை குறிவைத்து ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கக் கூடிய இவர்கள் சின் ஆகிய பிரதேசங்களை தங்கள் வசம் கொண்டு வந்து விட்டார்கள்.
இவை அனைத்துமே வங்கதேச எல்லை பகுதியில் அமைந்துள்ள பகுதிகள் என்பதால் மியான்மர் எல்லை பகுதியை கைப்பற்றி வந்த ஆறு ராணுவம் கிழச்சி குழு முதல் முறையாக வங்கதேசத்துக்குள்ளேயே நேரடியாக களம் இறங்கி உள்ளது.
இதைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இருக்கும் சில பிராந்தியங்களை இந்த ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதில் குறிப்பாக வங்கதேசத்தின் பிரபல ஜெயின் மார்க்கின் தீவு அருகே அமைந்துள்ள பகுதியில் ரோஹிங்கியா அகதிகள் முகாம் உள்ளது இது வங்கதேசத்தின் முக்கிய பகுதியாகும் அந்தப் பகுதிக்குள் ஆர்கன் கிளர்ச்சிகாரர்கள் நுழைந்து தங்கள் வசம் ஆக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary in English: The Arakan Army (AA) is a relatively new player in the complex landscape of Myanmar’s ethnic conflicts. Formed in 2012, this group primarily represents the interests of the Rakhine people, who have long felt marginalized by the central government. They’ve been pretty active in Myanmar’s Rakhine State, fighting for autonomy and rights for their people.