சீரியல் நடிகை ஆல்யா மானசா தான் மீண்டும் கர்ப்பமானது குறித்து வீடியோ ஒன்றில் சில விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார் அது குறித்த தகவல்.
திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகைகளுக்கு எந்த அளவு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பும் பெயரும் புகழும் உள்ளதோ அதுபோல சீரியல் நடிகையான ஆல்யா மானசாவிற்கும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் சின்னத்திரையில் தன்னோடு இணைந்து நடித்த நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டதை அடுத்து இருவருமே சின்னத்திரையில் பிஸியாக வேலை செய்து வருகிறார்கள்.
மறுபடியும் கர்ப்பமா? அத சத்தியமா பண்ணல..
தற்போது இனியா சீரியலில் ஆல்யாவும் கயல் சீரியலில் இவரது கணவரும் தங்களது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருவதை அடுத்து சின்னத்திரை நட்சத்திர தம்பதிகளாக விளங்கும் இவர்கள் சமீபத்திய தனியார் youtube சேனல் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்கள்.
அப்போது அவர்கள் பேசும் போது தங்களுடைய முதல் குழந்தைக்கு அவர்கள் எந்த திட்டமிடலும் செய்யவில்லை என்றும் அது போலத்தான் இரண்டாவது குழந்தைக்கும் எந்த திட்டமிடலும் செய்யப்படவில்லை என்று பேசினார்.
மேலும் இது குறித்து பேசிய ஆல்யா மானசா முதல் குழந்தை பிறந்த பின் மீண்டும் கர்ப்பம் ஆனதை தனக்கு தெரியவே தெரியாது. இதைத்தொடர்ந்து ஒரு நாள் உடற்பயிற்சி கூடத்தில் வயிறு பிளாட்டாக வேண்டும் என்று கடுமையான உடற்பயிற்சியை செய்தேன்.
அப்படி உடற்பயிற்சியை முடித்துவிட்டு வெளியே வந்த பிறகு வாந்தி எடுத்ததை அடுத்து ஃபுட் பாய்சன் ஆகி இருக்கும் என்று நினைத்து விட்டு விட்டேன். இது போலவே அடுத்த நாள் உடற்பயிற்சி செய்து முடித்ததும் மீண்டும் வாந்தி வந்தது வயிறும் கடுமையாக வலித்தது.
அப்போது தான் எனக்குள் பயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்த போது கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதை அடுத்து நான் கர்ப்பமாக இருப்பேன் என்று சத்தியமாக நினைக்கவே இல்லை. வயிற்று வலிக்கு காரணம் ஃபுட் பாய்சன் ஆக இருக்கும் என்றுதான் நினைத்தேன்.
ஆல்யா மானசா உருட்டு.. கலாய்க்கும் ரசிகர்கள்..
மேலும் கர்ப்பமாக இருக்க செய்யக்கூடிய பரிசோதனையை கூட நான் செய்யவில்லை என்று பேசியிருந்தால் இதைத் தொடர்ந்து அவருடைய கணவர் சஞ்சீவ் பேசும் போது ஆல்யா சொல்வது சரிதான் நாங்கள் எங்கள் முதல் இரண்டு குழந்தைகளுக்கு எந்த விதத்திலும் திட்டமிடவில்லை என்று சொன்னார்.
அத்தோடு ஆல்யா திடீரென கர்ப்பம் ஆகிவிட இப்படித்தான் அவள் கர்ப்பமானால் என்பது குறித்து விளக்கமாக இருவருமே பேசி இருக்கிறார்கள். இதைக் கேட்ட ரசிகர்கள் அனைவரும் பங்கமாக கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.
இதில் திட்டமிடவில்லை திட்டமிடவில்லை என்று எப்படி ஒன்றுமே தெரியாதது போல் பேசி இருக்கிறார்கள் என்று அவர்கள் நொந்து போக கூடிய அளவு அடுக்கடுக்காக நக்கலாக பேசி இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Summary in English : Alya Manasa recently sat down for an interview and shared some heartwarming insights about her pregnancy journey. It’s always inspiring to hear personal stories, and Alya didn’t hold back! She talked about the ups and downs, the joys of feeling those first kicks, and even the not-so-glamorous moments that come with pregnancy.