90-களில் பலரது மனதிலும் இடம் பிடித்து விருப்பமான தொகுப்பாளினியாக வலம் வந்த பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர் கூறிய சில விஷயங்களை இந்த பதிவை பார்க்கலாம்.
காமெடி டைம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட இவர் நடிகர் சிட்டிபாபு உடன் சேர்ந்து சொல்லக்கூடிய வணக்கத்தின் ஸ்டெயிலை பார்ப்பதற்காகவே பலரும் இந்த நிகழ்ச்சியை பார்த்தார்கள்.
இதைத் தொடர்ந்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக மாறிய இவர் இடையில் எங்கே போனார் என்று கேட்கக் கூடிய வகையில் காணாமல் போயிருந்த இவர் மீண்டும் சமீப காலமாக பிஸியாக வலம் வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் சமீபத்தில் சில சர்ச்சைகளில் சிக்கினார். எனினும் இவருக்கு கிடைத்த ரசிகர் பட்டாளம் இவரை சீரும் சிறப்புமாக நடத்துகிறார்கள்.
அந்த வகையில் இவர் தொகுத்து வழங்கிய இளமை புதுமை நிகழ்ச்சியில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு தன்னுடைய நினைவுகளை அர்ச்சனா பகிர்ந்திருக்கிறார்.
இதில் அவர் சொல்லும் போது இந்த இளமை புதுமை ஷூட்டிங் நடக்கும் போது தான் ஒன்பது மாதம் அதாவது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தேன். அந்த சமயத்தில் அந்த சேனல் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.
மேலும் எனக்கு நல்ல இடத்தை கொடுத்து என்னை அக்கறையோடு கவனித்துக் கொண்டது. என்னுடைய இன்ஸ்டாகிராம் குடும்பத்தில் இருந்து ஒருவர் இந்த புகைப்படத்தை எனக்கு அனுப்பினார். இதை நான் இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த புகைப்படமானது 17 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிகளவு லைக்குகளை குவித்து வருகிறார்கள். அத்தோடு இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
Summary in English: Wow, can you believe it’s been ages since “Ilamai Pudhumai” graced our screens? Anchor Archana recently took a stroll down memory lane, and it’s like opening a time capsule filled with all those nostalgic moments! From the quirky storylines to the unforgettable characters, that show was a huge part of so many lives. Archana shared some fun behind-the-scenes stories that had us all laughing and feeling warm inside.