விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் காதல் ஏற்படுவது புதிதல்ல. அந்த வகையில் இந்த சீசனில் ஒரு ஜோடி மத்தியில் நடக்கும் காதல் லீலைகள் குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
பிக் பாஸ் சீசன் 8-ல் விஷால் மற்றும் தர்ஷிகா இடையே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு இருந்தது வெளிப்படையாக அனைவருக்குமே தெரிந்ததை அடுத்து பிரமோ ஒன்றில் தர்ஷிகா விஷாலுடன் கொண்ட உறவு குறித்து பேசி இருக்கிறார்.
அப்படி அந்த பிரமோவில் அவர் தனது மனநிலை குறித்து சௌந்தர்யாவுடன் பேசும் போது இங்கு எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஆனால் தன்னால் அப்படி இருக்க முடியவில்லை. நான் ஜாலியாக இருக்க முயற்சி செய்கிறேன் என்றார்.
மேலும் பிடிக்கவில்லை என்றால் நேரடியாக பிடிக்கவில்லை என்று சொல்லிவிட வேண்டும். அவர்களுக்கு உன்னை பிடித்திருந்தால் நீ சிறிய விஷயம் செய்தாலும் பிடிக்கும்.
அதே சமயம் பிடிக்கவில்லை என்றால் என்ற கேள்வியை வைத்ததோடு இந்த வார்த்தை விஷால் மீது தர்ஷிகாவிற்கு இருக்கும் உணர்வை வெளிப்படுத்துவதாக சொல்லலாம்.
அதுமட்டுமில்லாமல் சீசன் 8 வீட்டில் எனக்கு ஸ்பெஷல் விஷால் என்று யாரிடம் சொல்லி இருக்கிறேன் .ஆனால் இதைத்தான் எல்லோரும் பேசி வருகிறார்கள்.
நான் அவரிடம் மறுபடியும் பேச தயக்கமாக இருக்கிறது. நான் போய் அவரிடம் எதையாவது கேட்டால் அவர் இல்லை என்று சொல்வது போல் ஆகிவிடும்.
இது நட்பாக மட்டும் இருக்காது என்று தனது வருத்தத்தை சௌந்தர்யாவிடம் வெளிப்படுத்துகிறார். இந்த கூற்றானது தர்ஷிகா விஷாலிடம் ஒரு காதல் உறவை எதிர்பார்த்து இருக்கிறார். ஆனால் விஷால் அதை வெளிப்படுத்தாமல் இருப்பது ஏமாற்றத்தை காட்டுகிறது.
இந்த விஷயத்தைப் பொறுத்தவரை சௌந்தர்யா எதுவும் கேட்டால் அவன் மிகவும் பாதுகாப்பான பதில் சொல்வான் என்று விஷால் பற்றி கூறியிருப்பதோடு விஷால் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கவனமாக இருப்பதாகவும் சொன்னதை அடுத்து தர்ஷிகா குழப்பத்தில் இருப்பதை உணர முடிந்தது.
எனவே பிக் பாஸ் வீட்டில் விஷால் மற்றும் தர்ஷிகா நெருக்கமாக பழகியது பலருக்கும் தெரியும். ஆனால் விஷால் தனது உணர்வுகளை வெளிப்படையாக சொல்லாமல் இருந்த நிலையில் தர்ஷிகா அவனிடம் தனது உணர்வுகளை தெரிவித்தாலும் அதை நட்பு ரீதியாக தான் அவர் எடுத்துக் கொள்கிறார்.
மேலும் இந்தப் பிரமோ வெளியான பிறகு ரசிகர்களின் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்தது சில தரிசிகாவின் வெளிப்பட தன்மையை பாராட்டு இருந்தாலும் விஷாலின் அணுகுமுறையை விமர்சித்து இருக்கிறார்கள்.
எது எப்படி போனாலும் இந்த பிரமோவில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை மேலும் அதிகரிக்க எந்த விஷயம் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.
Summary in English: Hey everyone! Today, let’s dive into the intriguing situation surrounding bb-tharshika and the whole Vishal matter. If you’ve been following the latest buzz, you know this has been quite the topic of discussion in our community.