Wednesday , 22 January 2025

சிடியில் என் அப்பாவை பார்த்த நிமிடம்.. பிக் பாஸ் தர்ஷிகா அப்செட் டாக்..!

விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட தர்ஷிதா தற்போது வேதனையாக வெளிப்படுத்தி இருக்கும் தகவல் குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

விஜய் டிவி என்றாலே மாஸ் அதிலும் பிக் பாஸ் என்றால் அதற்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் படை உள்ளது என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இதுவரை ஏழு சீசன்களை உலகநாயகன் தொகுத்து வழங்க எட்டாவது நடந்து வரும் இந்த சீசனை மக்கள் செல்வன் தொகுத்து வழங்கி வருகிறார். 

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டதின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருக்கும் பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷிகா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

சிடியில் என் அப்பாவை பார்த்த நிமிடம்..

இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது தன்னுடைய அப்பாவை சிடியில் பார்த்தபோது யார் இவர் என்று தெரியாமல் குழம்பி போனதாக தன்னுடைய வேதனையான விஷயத்தை பலர் மத்தியிலும் ஷேர் செய்து இருக்கிறார். 

தன்னை பெற்ற அப்பாவையே எனக்கு தெரியாமல் ஒரு நிமிடம் திணறியதையும் அடையாளம் தெரியவில்லை என்ற வேதனையையும் ஒரு பதிவாக அவர் வெளிப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது ஒருமுறை எங்களுடைய உறவினர் வீட்டில் நடந்த விழாவில் நாங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் எங்கள் மீது இருந்த அன்பு காரணமாக அவர்கள் எங்களுடைய குடும்ப புகைப்படத்தை அந்த விழாவின் சிடியில் இணைத்து இருந்தார்கள்.

அப்படி அந்த சிடியில் எங்களது புகைப்படத்தை இரைத்தது எங்களுக்கு தெரியாது அந்த சிடியை எங்கள் வீட்டில் வந்து எடுத்து போட்டு பார்க்கும் போது யார் இவர் என்று என்னுடைய அம்மாவிடம் கேட்டேன் ஏனென்றால் சிறு வயதில் இருந்து என்னுடைய அம்மாவுடன் மட்டும்தான் நான் வாழ்ந்து வருகிறேன். 

பிக் பாஸ் தர்ஷிகா அப்செட் டாக்..

இதனால் என்னுடைய அப்பா எப்படி இருப்பார் அவருடைய முகம் எப்படி இருக்கும் என்பதில் எனக்கு முற்றிலும் மறந்து போன நிலையில் சுத்தமாகவே தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் ஓரளவுக்குத்தான் தன்னுடைய அப்பா இப்படி இருப்பாள் என்ற ஒரு அனுமானம் அவருக்குள் இருந்துள்ளது தற்போது திடீரென அப்பாவின் புகைப்படத்தை என்னிடம் காட்டினால் இவர் யார் என்று எப்படி சொல்ல முடியும். 

எனவேதான் என்னால் உடனே கண்டுபிடிக்க முடியவில்லை என்று தன்னுடைய வேதனையை பதிவு செய்து இருக்கிறார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது. 

Summary in English: BiggBoss Tharshika recently shared a heartfelt story that really struck a chord with many fans. She opened up about her unique situation, revealing that she sometimes struggles to recognize her father’s face. This isn’t because of any family drama or bad blood; it’s simply because she has primarily grown up with her mother. It’s a reminder of how our upbringing shapes our relationships and perceptions.

Check Also

போடுடா வெடிய.. எதிர்பார்க்காத சமயத்தில் ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் 2 புதிய சீரியல்..!

Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.