திருச்செல்வம் இயக்கிய எதிர்நீச்சல் சீரியல் இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருந்ததோடு டிஆர்பி ரேட்டில் டாப்பில் இருந்தபோதே திடீர் என முடிக்கப்பட்டது. இதை அடுத்து இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் வரவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி சீரியலில் இணை இயக்குனராக 2002 ஆம் ஆண்டு பணியாற்றியவர் திருச்செல்வம். இந்த தொடரை அடுத்து அவர் கோலங்கள் தொடர்கள் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்.
இயந்த தொடரில் நடிகை தேவயானி, அபி என்ற கேரக்டரில் நடித்து பெரும்பாலான ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதனை அடுத்து இந்த தொடர் முடிவடைந்ததை அடுத்து அல்லி, ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சீரியல்களை இயக்கினார்.
எதிர்நீச்சல் 2 சீரியல் இணையும் வில்லி.. கதை பற்றி தெரியுமா?
இந்நிலையில் மக்களின் எதிர்பார்ப்பில் இருந்த எதிர்நீச்சல் சீரியல் 2 திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதன் கதைக்களம் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?
எதிர்நீச்சல் முதல் பாகத்தில் ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்தில் பெண்கள் படும் கஷ்டத்தை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைந்திருந்தது. இதில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து இறந்ததை அடுத்து வேலராமமூர்த்தி என்ற தொடரில் நடித்திருந்தார்.
எனினும் இவரது நடிப்பு மாரிமுத்துக்கு இணையாக சோபிக்காததை அடுத்து டிஆர்பி ரேட்டில் சருக்கல்களை சந்தித்து வந்ததை அடுத்து இந்த தொடர் முடிவடைந்து. இன்று முதல் எதிர்நீச்சல் 2 இரவு ஒன்பதரை மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இந்த சீரியலில் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியாக நடித்த சல்மா அருண் நடிக்க இருக்கிறார். இவர் வில்லியாக நடிக்கப் போகிறாரா? அல்லது பாசிட்டிவ் கேரக்டர் மக்களை கவரப்போகிறாரா? என்பது தெரியவில்லை.
இந்நிலையில் இந்த கதை குறித்து திருசெல்வம் பேசும் போது மக்கள் எதிர்பார்த்தபடி அவர்களுடைய ஆதங்கத்தை பூர்த்தி செய்யும் விதமாக எதிர்நீச்சல் 2 சீரியல் கதை இருக்கும்.
வெவ்வேறு குடும்பத்தில் இருந்து வந்த பெண்கள் ஒரு வீட்டில் மருமகளாக வந்த பிறகு அவர்களுடைய கனவுகள் அனைத்தும் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் தன்னுடைய கனவுகளை யாருக்காகவும் எதற்காகவும் கைவிடக்கூடாது என்ற தைரியத்தை எதிர்நீச்சல் 2 நிச்சயம் சொல்லும் என்று சொல்லி இருக்கிறார்.
சிறப்பான சம்பவம் வர இருக்கு..
மேலும் ஜனனி கதாபாத்திரத்தை பொருத்தவரை படித்துவிட்டு சுயமாக சம்பாதிக்க முடியாமல் அவஸ்தைப்படும் இல்லத்தரசிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடிய விதத்தில் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஜனனி இருக்கப் போகிறார்.
எப்போதும் சோகமாக இருந்த ஈஸ்வரி சந்தோஷத்தை எப்படி கொண்டாடலாம் என்ற ஒரு துணிச்சலான பெண்ணாக இந்த இரண்டாம் பகுதியில் உங்கள் மனதை கவரக்கூடிய விதத்தில் இருப்பார். தனக்கு தெரிந்த சமையல் விஷயத்தை வைத்து படிப்படியாக முன்னேறி காட்டுவார்.
ஆக மொத்தத்தில் எதிர்நீச்சல் 2 பெண்களை முன்னேற்றம் தொடராக இருக்கப் போகிறது. இது காமெடி, நையாண்டி என அனைத்துக்கும் குறைவு இருக்காது என்று திருசெல்வம் கூறியிருக்கிறார்.
Summary in English: Get ready for an exciting ride as “Ethirneechal Serial 2” makes its debut on Sun TV today! Fans of the original series have been eagerly awaiting this moment, and it’s finally here. This new chapter promises to bring back all the drama, twists, and turns that we loved in the first season while introducing fresh faces and storylines.