பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். ஆனால் கடந்த சில சீசன்களை அவர் சரியாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு வந்ததை அடுத்து விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இவரும் வெளியேறப் போகிறாரா?
விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் நடக்கும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் தற்போது எட்டாவது சீசனை எட்டி மக்கள் செல்வன் விஜய சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் கடந்த ஏழு சீசங்களை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் போது அவர் குறித்து பல்வேறு வகையான விமர்சனங்கள் இழந்ததோடு மட்டுமல்லாமல் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது சரியாக இல்லை என்று கூறி இருந்தார்கள்.
மேலும் அவர் தவறுகளை சுட்டிக் காட்டுவதில் பாரபட்சம் காட்டுவதாகவும் சில போட்டியாளருக்கு ஆதரவாகவும் சில பேருக்கு எதிராகவும் நடந்து கொள்கிறார்கள் என்ற கருத்து வேகமாக பரவியது.
இதைத்தொடர்ந்து கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக் கூடாது என்ற குரல்கள் வலுப்பெற்ற நிலையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்காமல் பொறுப்பில் இருந்து விலகினார்.
இதை அடுத்து இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க தேர்வு செய்யப்பட்டார். இதை அடுத்து இவர் எப்படி நிகழ்ச்சியை கையாளுவார் என்ற சந்தேகம் ஆரம்பம் முதல் பலருக்கும் ஏற்பட்டது.
எனினும் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்து முதல் நான்கு வாரங்கள் விஜய் சேதுபதியின் அதிரடியான நடவடிக்கைகளை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்ததோடு அவருக்கு பாராட்டுதல்களையும் தெரிவித்தார்கள். ரசிகர்களையும் கவர்ந்து இருக்கக்கூடிய வகையில் அவரது செயல்பாடு இருந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த சில எபிசோடுகளாக நடிகர் விஜய் சேதுபதி சரியாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை. ஒரு சில போட்டிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் செயல்படுகிறார் என்பதை வெட்ட வெளிச்சமாக பார்க்க முடிவதாக ரசிகர்கள் கருத்துக்களை கூறியிருந்தார்கள்.
அது மட்டுமல்லாமல் இவருக்கு கமலஹாசன் எவ்வளவோ பரவாயில்லை என்ற விமர்சனத்தை தொடர்ந்து வைத்து வருவதை அடுத்து அடுத்த சீசனில் நடிகர் கமலஹாசன் மீண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று சொல்லப்படுகிறது.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் ரூமை மொத்தமாக மாற்றி இருக்கிறது. பிக் பாஸ் குழு என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க அடுத்த சீசன் வரை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாது இந்த சீசனையிலேயே விஜய் சேதுபதியை மாற்றி விட்டு கமலஹாசனை பொறுப்பாளராக நியமியுங்கள் என்று பேசி வருகிறார்கள்.
மேலும் கமலஹாசன் இது குறித்து தன்னுடைய நிலையை வெளியிட வேண்டும் என்ற கருத்துக்களும் பேச்சுக்களும் பிக் பாஸ் ரசிகர்களின் மத்தியில் வேகமாக பேசப்பட்டு வருகிறது.
Summary in English: Bigg Boss Season 8 has fans buzzing once again, and it’s not just about the contestants this time! Viewers are rallying for their favorite hosts to return and spice things up as anchors. Remember the excitement when those charismatic personalities lit up the screen? Fans can’t seem to get enough of that energy and charm!