Wednesday , 22 January 2025

அட்ரா சக்க ஒரு வழியா விவாகரத்து கிடைச்சிருச்சு.. சந்தோஷத்தில் பிரபல சீரியல் நடிகர்!!

சின்னத்திரை சீரியல்களில் பக்கா  நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர் ஈஸ்வர் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது தன் மனைவியை விவாகரத்து செய்து தெரிந்து விட்டதாக அறிவித்திருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் படிக்கலாம்.

பெரிய திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை சீரியல் நடிக்கும் நடிகர்களுக்கும் நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் உள்ளது. அந்த வகையில் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஈஸ்வர்

இவருக்கும் சின்னத்திரை சீரியல் நடிகை ஜெய்‌ஸ்ரீக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது இவர்களுக்கு ரேவதி என்கிற பெண் குழந்தையும் உள்ளது இவரும் சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருவதை நீங்கள் பல சீரியல்களில் பார்த்து தெரிந்து இருக்கலாம். 

நிலையில் திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே ஜெயஸ்ரீக்கும் ஈஸ்வருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். அப்போது ஈஸ்வர் மீது அடுக்கடுக்கான புகார்களை அவரது மனைவி கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 

அதுமட்டுமல்லாமல் ஈஸ்வருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதை தட்டிக்கேட்ட காரணத்தால் தான் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார். 

மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்வர் கைது செய்யப்பட்டதை அடுத்து ஜாமினில் வெளிவந்த அவர் மகாலட்சுமி தன்னுடைய தோழிதான் என்றும் தங்களுக்கு இடையே இருக்கின்ற நட்பை தொடர்பு படுத்தி ஜெய் ஸ்ரீ பேசுவதில் துளியும் உண்மை இல்லை என்று பதிலடி தந்தார். 

இதைத் தொடர்ந்து  ஜெய் ஸ்ரீயை விவாகரத்து செய்து சட்டப்படி பெரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறார். இந்த சூழ்நிலையில் தான் இவர்கள் விவாகரத்து வழக்கு இழுபறியாக இருந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு வந்ததை அடுத்து விவாகரத்து கிடப்பில் போடப்பட்டது. 

இதை அடுத்து ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சுமார் ஐந்து வருடங்களுக்குப் பின்னர் ஜெயஸ்ரீக்கும் தனக்கும் விவாகரத்து கிடைத்துவிட்டதாக நடிகர் ஈஸ்வர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்.

 இதை தொடர்ந்து மனைவியை பிரிந்த சந்தோஷத்தில் அறிக்கையை வெளியிட்டு சோதனை காலத்தில் இருந்து தற்போது மீண்டும் விட்டதாக சொல்லி இருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் ஜெய் ஸ்ரீக்கும் தனக்கும் இடையேயான செட்டில்மெண்ட் எல்லாம் முடிவடைந்து விட்டதாகவும் இனி என் விருப்பப்படி வாழ எனக்கு உரிமை உள்ளது என்று சொல்லி இருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் நடிப்பில் அவர் அதிக அளவு கவனத்தை செலுத்த போவதாகவும் சவாலான காலத்தில் எனக்கு பக்க பலமாக இருந்தவர்களுக்கும் கடவுளுக்கும் நன்றி. இந்த விவாகரத்து தொடர்பாக எந்த ஒரு பேட்டியையும் அளிக்க மாட்டேன் எங்கள் முடிவுக்கு மதிப்பு கொடுங்கள் என்று பதிவிட்டு இருக்கிறார். 

எனினும் இதுகுறித்து ஜெயஸ்ரீ எந்தவிதமான தகவலையும் வெளியில் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது. 

Summary in English: In some surprising news from the world of entertainment, serial actor Isvar, also known as Ishwar, has officially divorced his wife Jayashree. Fans have been buzzing about their relationship for quite some time, and now it seems like the couple has decided to go their separate ways.

Check Also

போடுடா வெடிய.. எதிர்பார்க்காத சமயத்தில் ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் 2 புதிய சீரியல்..!

Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.