Wednesday , 22 January 2025

மகளைப் போலவே தந்தை.. 4 ஆண்டு கழித்து நடிகை சித்ராவின் வீட்டில் சோகம்!! வேதனையில் ரசிகர்கள்! 

விஜே சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். யாரும் எதிர்பார்க்காத வகையில் இவர் நம்மை விட்டு பிரிந்து சென்றது போல அவர் வீட்டில் தற்போது சோகம் கவ்வியுள்ளது. அது குறித்து இந்த பதிவை பார்க்கலாம்.

அசுர வளர்ச்சியாய் சின்னத்திரை நடிகை சித்ரா விஜே சித்ராவாக இருந்து சின்னத்திரையில் கால் பதித்து மள மளவென்று முன்னேறியது பலரையும் மலைக்க வைத்தது.

இவர் நடிப்பில் வெளிவந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை பார்ப்பதற்கு என்று இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் போட்டா போட்டி போட்ட காலம் ஒன்று உண்டு. 

மகளைப் போலவே தந்தை.. 4 ஆண்டு கழித்து..

இந்நிலையில் என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியாத அளவு கடந்த டிசம்பர் ஒன்பதாம் தேதி 2020 ஆம் ஆண்டு பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இவர் தனது வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்டார். 

இந்த துயர சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் இவரது தந்தை காமராஜ் என்று டிசம்பர் 31-ஆம் தேதி திருவான்மையூரில் இருக்கும் தனது வீட்டில் தன் மகள் எடுத்த அதே முடிவை எடுத்து இந்த உலகை விட்டு பிரிந்திருக்கிறார். 

மேலும் தன் மகளை பிரிந்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் என்ன காரணத்திற்காக அவர் அப்படி செய்தார் என்பது புரியாத புதிராகவே இருக்கக்கூடிய சமயத்தில் இந்த இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாக அவர் குடும்பத்தில் இருக்கும். 

இதைத் தொடர்ந்து இந்த விஷயமானது தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது. 

நடிகை சித்ராவின் வீட்டில் சோகம்!! வேதனையில் ரசிகர்கள்..

மேலும் இன்னாரது இறப்பு குறித்து காவல்துறையினர் எதனால் இப்படி நடந்தது என்ற கோணத்தில் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 

ஏற்கனவே நடிகை சித்ராவின் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது சித்ராவின் தந்தையும் மகளின் முடிவை எடுத்து இருப்பது அவரது மன உளைச்சல் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

இதை அறிந்து கொண்ட காவல் துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு வந்து உரிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள். 64 வயதாகும் காமராஜ் மகளை போலவே தன் உயிரைத் துறந்த செய்தி தற்போது பரபரப்பாகிவிட்டது. 

Summary in English: It’s heartbreaking to hear about the recent news surrounding serial actress and VJ Chitra, whose father, Kamaraj, tragically committed suicide. This shocking event has left many in disbelief and mourning. Kamaraj was known for his supportive role in Chitra’s life and career, always cheering her on as she navigated the ups and downs of the entertainment industry.

Check Also

போடுடா வெடிய.. எதிர்பார்க்காத சமயத்தில் ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் 2 புதிய சீரியல்..!

Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.