பிரபல செய்தி வாசிப்பாளர் மற்றும் தொகுப்பாளினியாக விளங்கும் பனிமலர் பன்னீர்செல்வம் அண்மையில் தாயாக மாறியதை அடுத்து தன் குழந்தைக்கு அகிரா என்ற பெயரை சூட்டி இருக்கிறார். இவர் தனது குழந்தைக்கு பால் கொடுப்பதில் ஏற்பட்டிருக்கும் சிரமங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பிள்ளை பெற்ற தாய்மார்கள் தற்போது நேரடியாக பாலூட்டுவதற்கு பதிலாக சில உபகரணங்களை பயன்படுத்தி பாலூட்டி வருகிறார்கள். அந்த வகையில் அண்மையில் தாயான பனிமலர் தன் குழந்தைக்கு பால் கொடுக்க பயன்படுத்தும் ஒரு பிரத்தியேக உபகரணம் ஒன்றை காணொளியில் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது இதில் இவர் பால் கொடுக்கும் உபகரணத்தின் மூலம் குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை விரிவாக விளக்கிக் காட்டி இருக்கிறார்.
இதை அடுத்து இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் பல்வேறு கேள்விகளை பனிமலரிடம் கேட்டிருக்கிறார்கள். குறிப்பாக இந்த உபகரணத்தை பயன்படுத்துவதால் நிஜமாகவே பால் வருகிறதா? உங்களுக்கு எத்தனை மில்லி பால் வருகிறது என்பது போன்ற கேள்விகளை முன் வைத்திருக்கிறார்கள்.
மேலும் பால் உற்பத்தி மற்றும் அளவினை அறிந்து கொள்ள இந்த உபகரணத்தை பயன்படுத்துவதன் மூலம் பால் சுரப்பானது உண்மையில் அதிகரிக்கிறது என்றும் நேரத்துக்கு ஏற்ற சூழ்நிலையில் பால் வரும் அளவில் மாற்றங்கள் உள்ளது என அவர் தெளிவாக விளக்கம் கொடுத்திருப்பது தாய்மார்களுக்கு ஏற்ற வகையில் உள்ளது.
அத்தோடு தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்த கூடிய வகையிலும் ஒரு குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அது எவ்வளவு முக்கியம் என்பதை பேசக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது.
எனவே பனிமலரின் இந்த காணொளி புதிய தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் தாய்ப்பால் கொடுக்க சிரமப்படுபவர்கள் இந்த உபகரணத்தை பயன்படுத்தி அதன் மூலம் பலன் அடையலாம் என்பதை தனது அனுபவத்தின் மூலம் சொல்லி இருக்கிறார்.
இவரின் இந்த வெளிப்படையான பேச்சு மற்றும் விளக்கங்கள் பல மத்தியிலும் பாராட்டுதல்களை பெற்றுள்ளதோடு சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
மேலும் பனிமலரின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருவதோடு பால் கொடுப்பதில் உள்ள சவால்களை பொது வெளியில் பேச தயங்குபவர்களது மத்தியில் இவர் எடுத்திருக்கும் முயற்சி பலருக்கும் ஊக்கம் அளிக்க கூடிய வகையில் உள்ளது என்பதை தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும் இந்த வீடியோவின் மூலம் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதோடு மட்டுமல்லாமல் தாய்ப்பால் கொடுக்க சிரமப்படுபவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இந்த வீடியோ இருக்கும் என்றால் அதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
Summary in English: When it comes to breastfeeding, every mom knows that having the right tools can make all the difference. That’s where Panimalar Paneer Selvam’s insights on breast pumping machines come into play! These nifty devices are designed to help moms express milk efficiently and comfortably, making life a whole lot easier.