பிரபல இன்ஸ்டாகிராம் பிரபலமான ராகுல் டிக்கி பைக் விபத்தில் மரணம் அடைந்த செய்தி தற்போது ரசிகர்களை அதிர்ச்சிகள் ஆழ்த்தியுள்ளதோடு இது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது அது பற்றிய தொகுப்பை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ராகுல் டிக்கி தனது மனைவியை அழைத்து வர மாமியார் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று இருக்கிறார். அப்போது கவுந்தப்பாடி அருகே சாலையின் தடுப்பின் மீது வண்டி மோதி விபத்துக்குள்ளானது.
இதை அடுத்து விற்பது நடந்த சம்பவத்திலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான ஃபலோயர்களைக் கொண்டிருந்த ராகுல் டிக்கியின் திடீர் மரணம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதை அடுத்து ரசிகர்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்ற வேளையில் அவர் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது வேகக் கட்டுப்பாடுடன் செல்ல வேண்டும் என்றும் ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி வருகிறார்கள்.
மேலும் ராகுல் டிக்கி ஹெல்மெட் அணியாமல் சென்றதால் தான் உயிரிழந்திருக்கிறார் என்ற கருத்துக்கள் பரவி வரும் வேளையில் அவர்கள் ஹெல்மெட் அணித்திருந்தார்.
மேலும் விபத்திற்கு பிறகு அவர் தலையில் இருந்த ஹெல்மெட்டை கழட்ட முடியாத அளவிற்கு இறுக்கமாக இருந்தது என்று அவர் நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
இதுகுறித்து போலீசில் விசாரணை நடந்து வருகிறது. ராகுல் டிக்கியின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது அவரது இறுதிச் சடங்கு வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி உள்ளதாகவும் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தக்கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம்.
Summary in English: It’s with a heavy heart that we share the news about Rahul Tiky. Just when it seemed like he was on the verge of turning things around, he passed away unexpectedly at the last moment. It’s tough to wrap our heads around it, especially considering all the plans and dreams he had for the future.