Wednesday , 22 January 2025
prashanth kishore and vijay

ஒவ்வொரு அடியும் இடி.. களம் இறங்கி அடிக்கும் விஜய்.. கலங்கி இருக்கும் முக்கிய தலைகள்..!

Lately, there’s been a buzz in the political circles about Prashanth Kishore possibly joining the Tamil Nadu-based TVK Party.

தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தக் கூடிய வகையில் புதிதாக கட்சி ஆரம்பித்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் தளபதி விஜயின் நடவடிக்கைகள் உள்ளது. 

prashanth kishore move

இதை அடுத்து அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் என்னடா இது என்று என்ன செய்வது என்று தெரியாமல்  புலம்பி வருகிறார்கள் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் புள்ளிகள்.

ஒவ்வொரு அடியும் இடி.. களம் இறங்கி அடிக்கும் விஜய்.. 

உண்மையைச் சொல்லப்போனால் அரசியலில் களம் இறங்கிய விஜயால் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் கிடைக்குமா? என்ற  பேச்சு ஒரு பக்கம் இருந்தாலும் அரசியல் களத்தில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனினும் நடிகர் விஜய் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனது அரசியலில் அடுத்த கட்ட நகர்வுகளை அதிரடியாக செய்த வண்ணம் இருக்கிறார். 

அது மட்டுமா? தன்னுடைய கடைசி படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஒரு பக்கம் மும்முரமாக நடைபெற்ற போதிலும் தனது பார்வையை முழு நேரமும் அரசியலில் செலுத்த விஜய் முற்பட்டு இருக்கிறார். 

prashanth kishore talk

இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தேர்தல் ஆலோசகராக பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. 

இந்நிலையில் தமிழக வெற்றி கழக கட்சியின் அறிவிப்புக்கு பின்னால் பிரசாத் கிஷோர் பேட்டி ஒன்றில் பேசும் போது இது வரை நடிகர் விஜய் என்னை அழைக்கவில்லை எனக் கூறியிருந்தார். 

மேலும் அப்படி அவர் என்னை அழைத்தால் கண்டிப்பாக அவருடைய கட்சிக்காக தான் பணியாற்ற தயாராக இருப்பதாக வெளிப்படையாக பேசியிருந்தார்.

கலங்கி இருக்கும் முக்கிய தலைகள்..

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் வியூக நிபுணராக பணியாற்றியவர் இந்த பிரசாந்த் கிஷோர். 

இந்நிலையில் தந்தி டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமிழக வெற்றிக் கழகம் குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்திருந்தார் பிரசாந்த் கிஷோர். 

அதில் அவர் நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் நான் முன்னரே கணித்த ஒன்றுதான். அது தற்போது நடந்துள்ளது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திராவிட கட்சிகள் கிட்டத்தட்ட 80 சதவீத வாக்குகளை தன் பக்கம் கொண்டிருக்கிறார்கள். 

prashanth kishore speech

ஆனால் விஜயின் இந்த அதிரடி வரவால் அது 70% ஆக குறையும். அதாவது அடுத்த 10 முதல் 15 வருடத்தில் திராவிடக் கட்சிகளின் மொத்த வாக்கு சதவீதம் 40 சதவீதத்திற்கு கீழ் குறைய வாய்ப்புள்ளது. 

அது மட்டுமல்லாமல் விஜயின் அரசியல் பயணம் எப்படி கூட்டணி யாருடன் என்பதை பொறுத்து இது அமையும் என பரபரப்பான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். 

இதை அடுத்து விஜய்க்கு அரசியல் ஆலோசகராகவும் தேர்தல் வியூக நிபுணராகவும் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட இருக்கின்ற தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தை புரட்டிப் போட்டுவிட்டது. 

கட்சியை ஆரம்பித்தோமா.. கையெழுத்து போட்டமா.. வந்து சென்றோமோ.. என்று இல்லாமல் முழு மூச்சாக தேர்தலுக்கான களம் காண தளபதி தயாராகிவிட்டார். 

எனவே வருகின்ற 2026 தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில் தன்னுடைய தேர்தல் வியூகங்களை பக்காவாக பிளான் செய்து கடுமையான வேலைகளை துவங்க இருக்கிறார். 

prashanth kishore

இதை அடுத்து நடிகர் விஜய் மீது எந்த குற்றத்தை சுமத்தி மக்களை திசை திருப்ப முடியும் என்று எதிரில் இருக்கும் எதிரணியினர் தற்போது குழப்பத்தில் குழம்பி இருக்கிறார்கள். 

அது மட்டுமல்லாமல் நடிகர் விஜய் இப்போது தான் அரசியலுக்கே வருகிறார். அவர் ஒரு சினிமா நடிகர் ஒரு கூத்தாடி என்ற விமர்சனத்தை தவிர்த்து வேறு என்ன சொல்ல முடியும். 

அந்த வகையில் அரசியல் தலைகள் பல விஜயின் வாயை அடைக்க என்ன வழி என்று தெரியாமல் பொறி கலங்கி நிற்கிறார்கள் என்று சொல்லலாம்.

Summary in English : Recently, there’s been a buzz in the political circles about the possible appointment of Prashanth Kishore, the well-known political strategist, to the Tamil Nadu-based TVK Party. This speculation has everyone talking! Kishore, who’s made quite a name for himself with his innovative strategies and successful campaigns across various states, could bring a fresh perspective to the party.

Check Also

Rahul Tiky மரணம்.. நைட் நடந்தது இதுதான்.. திக் திக் இறுதி நிமிடங்கள்..! அவரது நண்பர் கூறிய அதிர்ச்சி தகவல்..!

It’s with a heavy heart that we share the news about Rahul Tiky. Just when it seemed like he was on the verge of turning things around, he passed away unexpectedly at the last moment.