Wednesday , 22 January 2025

யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் வைத்த ட்விஸ்ட்.. விஜய் பேச்சுக்கு முதல்வர் கொடுத்த சிறப்பான பதிலடி..!

Recently, the Chief Minister of Tamil Nadu made headlines with his response to remarks from TVK leader and actor Vijay’s speech against the DMK.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் விஜய் தனது 69 ஆவது படத்தில் நடித்து முடித்த கையோடு திரை உலகிற்கு பை பை சொல்லி விட்டு முழு நேர அரசியல்வாதியாக மாற இருக்கிறார். 

இதனை அடுத்து தமிழக வெற்றிக்கழக கட்சியின்  அரசியல் எதிரி திமுக தான் என்பதை ஆணித்தரமாக நடந்து முடிந்த முதல் மாநாட்டில் பதிவு செய்திருந்தார். 

இதனை அடுத்து நேற்று நடந்த தவெக பொதுக்குழு கூட்டத்தில் திமுக அரசை கண்டித்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கக்கூடிய நடிகர் விஜய் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகி விட்டார். 

அதுமட்டுமல்லாமல் நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் விஜய் தொண்டர்களுக்கு கொடுத்த அட்வைஸ் என்னவென்றால் அரசியல் களத்தில் யாருடனும் தர்க்கம் செய்யக்கூடாது என்பது தான். 

மேலும் நாகரிகம் இல்லாமல் தரக்குறைவாக பேசக்கூடாது. ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு மட்டுமே பதில் தர வேண்டும். அப்படி கொடுக்கும் போது கூட உரிய ஆவணங்களை தந்து பதிலடி தர வேண்டும் என கூறினார். 

அது மட்டுமல்லாமல் கொச்சையான வார்த்தைகளை பேசி தனி நபர் மீது தாக்குதல் நடத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டளைகளை தனது கட்சியை சார்ந்த தொண்டர்களுக்கு அறிவுரையாக சொன்னதோடு கட்டாயம் இதை கடைபிடிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

அத்தோடு இந்த ஒரு வரை முறையும் இல்லாமல் தேவையற்ற விமர்சனங்களை விமர்சிப்பதற்கு பதிலாக அதை விட்டு கடந்து செல்ல பழகிக் கொள்வது அவசியம். இதன் மூலம் நேரத்தை வீணடிக்காமல் இருக்கலாம்‌ என அறிவுரை பல தந்திருந்தார். 

இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்ட போது நடிகர் விஜய் குறித்து மறைமுக விமர்சனத்தை வைத்திருக்கிறார். 

அவர் பற்றி பேசும் போது புதிய கட்சிகள் தொடங்கியவர்கள் கூட திமுக அழிய வேண்டும் என்று தான் பேசுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் கொடுக்க தேவையில்லை. மேலும் அது பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. 

நேரத்தை வீணாக்காமல் கடந்து செல்லுங்கள் என்று கூறி இருக்கிறார். நடிகர் விஜய் தன்னுடைய தொண்டர்களுக்கு சீமான் பற்றி கவலைப்படாமல் கடந்து செல்லுங்கள் என்று மறைமுகமாக சொல்லி இருக்கிறார்.

இதை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் யாரும் விஜய் பற்றி கவலைப்பட வேண்டாம். அவரை கடந்து செல்லுங்கள் என்று விஜய்க்கு பதிலடி தந்திருக்கிறார். 

இதை அடுத்து இது என்னடா ஒரு மிகப்பெரிய ட்விஸ்டா இருக்கு என்று இணைய பக்கங்களில் இந்த வீடியோ காட்சிகள் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

Summary in English : Recently, the Chief Minister of Tamil Nadu took a moment to respond to some remarks made by TVK leader and actor Vijay during a speech that stirred quite a bit of conversation. Vijay, known for his charismatic presence both on-screen and off, didn’t hold back in expressing his views against the DMK party.

Check Also

Rahul Tiky மரணம்.. நைட் நடந்தது இதுதான்.. திக் திக் இறுதி நிமிடங்கள்..! அவரது நண்பர் கூறிய அதிர்ச்சி தகவல்..!

It’s with a heavy heart that we share the news about Rahul Tiky. Just when it seemed like he was on the verge of turning things around, he passed away unexpectedly at the last moment.